நேற்று நடைபெற்ற “தொடரி” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் இமான் அண்ணாச்சி “தொடரி” படத்திலிருந்து தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் எனக் கூப்பிடலாம்,” என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார். “தனுஷ் சாருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். வரும் போது நம்ப தம்பிமார் எல்லாரும் இளைய சூப்பர்ஸ்டாருன்னு கூப்பிட்டாங்க, அது நல்லா இருக்கு. பிரபு சாலமன் சாரோ இந்தப் படத்துல இருந்து நாம தனுஷ் சாரை இளைய சூப்பர்ஸ்டாருன்னே கூப்பிடலாம். ஏன்னா, அந்த அளவுக்கு அவர் எடுத்துக் கொண்ட எல்லா கதாபாத்திரங்கள்லயும், நிஜமாகவே வாழக் கூடிய ஒரு உலகத் தரம் வாய்ந்த ஒரு கலைஞர்,” எனப் பேசினார்.

பின்னர் பேசிய தனுஷ், “தகுதிக்கு மீறி என்னை சிலர் பாராட்டும் போது சங்கடமாக இருக்கிறது என்று பேசினார். அது அவங்களோட அன்பைதான் காட்டுது, அந்த அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி,” என்றார்.

இனி, “தொடரி” விளம்பரங்களில் வெறும் தனுஷ் வருமா அல்லது இளைய சூப்பர்ஸ்டார் தனுஷ் என்று வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.