5 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இளவரசு.. ஒவ்வொரு படமும் வேற ரகம்

சினிமாவில் ஒளிப்பதிவாளர், குணச்சித்திர நடிகர் என பன்முகம் படைத்தவர் நடிகர் இளவரசு. தற்போது பல திரைப்படங்களில் நடித்துவரும் இவர் களவாணி மாயாண்டி குடும்பத்தார் 2, குருவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். மேலும் தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இளவரசு ஒளிப்பதிவு செய்த திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

பாஞ்சாலங்குறிச்சி: 1994 ஆம் ஆண்டு இயக்குனர் சீமான் இயக்கத்தில் நடிகர் பிரபு, மதுபாலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்திற்கு இளவரசு ஒளிப்பதிவு செய்து இருப்பார். பச்சைப்பசேல் என இயற்கை வளங்களோடு இருக்கும் கிராமத்தை அழகாக இத்திரைப்படத்தில் காண்பித்து இருப்பார் இளவரசு. குடும்பம், காதல் உள்ளிட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசை அமைத்திருப்பார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல ஹிட் கொடுத்த நிலையில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நினைத்தேன் வந்தாய்: நடிகர் விஜய்,ரம்பா,தேவயானி, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குனர் செல்வபாரதி இயக்கத்தில் வெளியான நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தை இளவரசு ஒளிப்பதிவு செய்திருப்பார். இத்திரைப்படத்தில் ரம்பா ஊஞ்சலாடும் லாங் ஷாட் காட்சிகள் இவரது கேரியரில் முக்கியமான ஒளிப்பதிவாகும். முக்கோணக் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படதிற்கு இசையமைப்பாளர் தேவா இசை அமைத்திருப்பார்.

மனம் விரும்புதே உன்னை: 1999 ஆம் ஆண்டு நடிகர் பிரபு, மீனா,கரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மனம் விரும்புதே உன்னை திரைப்படத்தை இயக்குனர் சிவச்சந்திரன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு கொடைக்கானலில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில் கொடைக்கானலின் அழகில் தத்ரூபமாக இளவரசு ஒளிப்பதிவு செய்திருப்பார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.

ஏழையின் சிரிப்பு: 2000 வருடம் நடிகர் பிரபுதேவா, கௌசல்யா, ரோஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஏழையின் சிரிப்பு திரைப்படத்தை இயக்குனர் சுபாஷ் இயக்கினார். இத்திரைப்படத்தின் பல காட்சிகள் பேருந்துகளில் இருப்பது போல் இடம்பெற்றிருக்கும், இக்காட்சிகளை தன்னுடைய ஒளிப்பதிவு மூலம் இளவரசு நேர்த்தியாக காண்பித்திருப்பார். மேலும் கூலி வேலை செய்யும் பிரபுதேவாவின் நடிப்பு, அவரை காதலிக்கும் கௌசல்யாவின் எதார்த்தமான நடிப்பு உள்ளிட்டவை திரைப்படத்தின் பெருமளவு பேசப்பட்டது.

பெரிய தம்பி: நடிகர் பிரபு,நக்மா உள்ளிட்டோர் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான பெரிய தம்பி திரைப்படம் திரைப்படத்தை இயக்குனர் சித்ரா லட்சுமணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற தங்க நிலவே பாடல் ஊட்டியில் உள்ள பயகரா நதியில் காட்சிப்படுத்தி இருப்பர். அந்த பாடலின் காட்சியை ஒளிப்பதிவு செய்த இளவரசு மிகவும் அற்புதமாக அந்த நதியினை காட்சிப்படுத்தி இருப்பார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்