Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷ் நடிக்கும் மாரி-2 படத்தில் இளையராஜா?
2015ல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ஹிட் ஆன மாரி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி சில நாட்களாகவே, பல தகவல் வந்த வண்ணம் உள்ளது.
தனுஷ்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த படம் மாரி இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார் இந்த படம் வெற்றி பெற்றதால் மாரி 2 படம் எடுகிறார்கள். மேலும் தனுஷ்க்கு ஜோடியாக வரலெட்சுமி நடிக்கிறார் இந்த படத்தில் முதன் முதலாக தனுஷ்வுடன் நடிக்கிறார்.
தற்போது மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் ஒருவர் டோவினோ தாமஸ். தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலமாக தற்போது மாரி 2ம் பாகத்தின் வில்லனாக நடிக்கிறார். இது தான் டோவினோவிற்கு முதல் தமிழ் படம்.
இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘தரங்கம்’ படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இதன் மூலம் இவருக்கு மாரி 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் மாரி 2 படத்திற்கு இசையமைக்கிறார் . தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் இளையராஜாவை சந்தித்து ஆசிபெற்று, அவரது குரலில் முதல் பாடலை பதிவுசெய்து மாரி2 படத்திற்கான பாடல் துவங்கப்பட்டது. இந்த தகவலை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
@#Isaignani #Ilaiyaraja sings a song for Actor #Dhanush’s #Maari2 On https://t.co/VhUjxTAEcZ@dhanushkraja @directormbalaji @thisisysr pic.twitter.com/3t3vP4DVi0
— Cinemapettai (@cinemapettai) January 17, 2018
