எடுபிடி வேலை பார்த்ததற்கு வாய்ப்பு கொடுத்த இளையராஜா.. 30 ஆயிரம் பாடலுக்கும் மேல் பாடிய பிரபலம்

இசைஞானி இளையராஜா மற்றவர்கள் தன்னை சார்ந்து இருக்க வேண்டும் என்ற தவறான பிம்பம் தமிழ் சினிமாவில் இருந்து தான் வருகிறது. அதாவது தன்னுடன் வேலை பார்ப்பவர்களை அடிமையாக வைப்பதும், அதிகமாக கோபப்படுவதும் இளையராஜாவின் இயற்கையான குணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் தனக்கு எடுபிடி வேலை பார்த்து வந்தவரை கை பிடித்து தூக்கி விட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது இளையராஜாவிற்கு மனோ பார்த்த சின்ன சின்ன வேலை பிடித்து போக, மனோவிற்கு பாடுவதற்கான வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவைச் சேர்ந்த பாடகர் மனோ பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல், நடிப்பு, தயாரிப்பு என்று பல திறமைகளைக் கொண்டவர். இவர் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் தெலுங்கு, தமிழ், பெங்காலி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பாடியுள்ளார்.

ஆரம்பக்காலத்தில் இளையராஜாவிற்கு இவரை ரொம்ப பிடித்து போக வேலைக்காரன் என்ற படத்தில் ‘வேலை இல்லாதவன் டா, வேலை தெரிஞ்சவன் டா’ என்ற பாடலை பாடுவதற்கான வாய்ப்பு கொடுத்துள்ளார் இளையராஜா.

அங்கு தான் இவரது சினிமா பயணம் தொடங்கியுள்ளது, தற்போது கூட மனோ எனது தெய்வம் இளையராஜா தான் என்று பல பேட்டிகளில், மேடைகளில் தெரிவித்திருந்தார். கமலஹாசனுடன் சிங்காரவேலன் படத்தில் காமெடியில் பட்டைய கிளப்பி இருப்பார் மனோ.

mano-illayaraja
mano-illayaraja

மனோவின் உண்மையான பெயர் நாகூர் பாபு அவர் ஒரு முஸ்லிம், இந்த பெயரை இளையராஜா தான் மனோ என்று மாற்றி வைத்துள்ளாராம். இப்படி சினிமாவில் தன்னை தூக்கி விட்ட இளையராஜாவை தற்போது வரை தெய்வமாக கும்பிட்டு வருகிறார் மனோ.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்