Connect with us

Cinemapettai

பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் இளையராஜா வழக்கு

Tamil Nadu | தமிழ் நாடு

பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் இளையராஜா வழக்கு

சென்னை: பிரசாத் ஸ்டுடியோவில் இடம் ஒதுக்க கோரி இசைஞானி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா நீண்ட காலமாக இசையமைத்து வருகிறார். 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படத்தில் தொடங்கி இப்போது வரை அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்குதான் இளையராஜா ஒலிப்பதிவு கூடத்தில் இசையமைத்து வந்தார்.

இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் அவருக்கு இடம் ஒதுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிராக திரையுலகினர் கடந்த 28ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தி நியாயம் கேட்டனர். பாரதிராஜா தலைமையில் இயக்குனர்கள் மற்றும் திரையுலகினர் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் இதுவரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

பிரசாத் ஸ்டுடியோவில் இடம் ஒதுக்க கோரி இசைஞானி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top