fbpx
Connect with us

இரண்டாவது முறையாக இளையராஜா தேசிய விருதை வாங்க செல்லவில்லை- இவரின் குற்றசாட்டு இதான் !

News / செய்திகள்

இரண்டாவது முறையாக இளையராஜா தேசிய விருதை வாங்க செல்லவில்லை- இவரின் குற்றசாட்டு இதான் !

ILAYARAJA63வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியின் உள்ள விக்யான் பவனில் நடந்தது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.

இசைஞானி இளையராஜா ‘தாரை தப்பட்டை’ படத்திற்கு இசை அமைத்ததற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு தேர்வு பெற்றார்.

ஆனால் பல்வேறு காரணங்களால் இளையராஜா உள்பட தமிழ் படவுலகை சேர்ந்த பலரும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை.

இளையராஜா ஏற்கெனவே 2010-ம் ஆண்டு பழசிராஜாவுக்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது பெற்றார். ஆனால் அப்போதும் அந்த விருதினைப் பெற டெல்லிக்குப் போகவில்லை.

பின்னணி இசை, பாடல்கள் என தனித்தனியாகப் பிரித்து தேசிய விருது தருவதை இளையராஜா விரும்பவில்லை. ‘சிறந்த பின்னணி இசையைத் தந்தவர், சிறந்த பாடலைத் தரமாட்டாரா? எதற்காக இந்த பாகுபாடு?’ என்று அவர் ஏற்கெனவே கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top