இவர்களுக்கு ஏன் தூண்டில்.. இளையராஜா, பாக்கியராஜ், சுகாசினி வளைக்க போடும் திட்டம்

சமீபத்தில் இளையராஜா, பாக்கியராஜ், சுகாசினி போன்றோர்கள் பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஏன் இவர்கள் இவ்வாறு தேவை இல்லாததை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர் என்று விசாரித்துப் பார்த்தால் ஒரு பெரிய விடையே கிடைத்து வருகிறது. இவர்கள் சமீபத்தில் ஹிந்தி மொழிக்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே பாக்யராஜ், இளையராஜா சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில். இப்பொழுது சுகாசினி, ‘ஹிந்தி ஒரு நல்ல மொ.ழி ஹிந்தி பேசுபவர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆகையால் அவர்களுடன் பேச வேண்டுமென்றால், ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்’  என்று ஒரு சர்ச்சை கருத்தை கூறி தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி வருகிறார்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று விசாரித்து பார்த்தால் பின்னால் இருந்து சாவி போடுவது பாஜக என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வளர்வதற்கு முக்கியமான ஒரு காரணம் திரைத்துறையினர். அதனால் திரைத் துறையினருக்கு தூண்டில் போட்டு வருகின்றனர் பாஜகவினர்

ஆனால் இவர்களுக்கு தூண்டில் போட்டு என்ன லாபம் என்று சினிமா வட்டாரத்தில் பலர் பேசுகின்றனர். கிட்டதட்ட இவர்கள் ரிட்டையர் ஆகி ஓய்வுபெறும் நிலையில் இவர்களை வைத்து என்ன லாபம் இருக்கிறது அந்த கட்சிக்கு என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

இருப்பினும் தமிழ் மொழியை மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு அல்லது உயர்வாக பேசினால் நிச்சயம் பெரும் சர்ச்சையில் சிக்கி விடுவோம் என தெரிந்தும் இவர்களெல்லாம் துணிச்சலுடன் கருத்து தெரிவிப்பது தான் பலருடைய விமர்சனத்திற்கு ஆளாகின்றனர்.

ஆனால் இவர்களுக்கெல்லாம் மாறாக ஏஆர் ரகுமான் இந்தித் திணிப்பை முற்றிலும் எதிர்த்து, தமிழ் மொழிதான் மற்ற மொழிகளுக்கெல்லாம் முன்னோடி என்று வலியுறுத்தி, சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார்.

Next Story

- Advertisement -