இந்தியாவிலேயே அதிக விருதுகள் பெற்ற இசையமைப்பாளர்!

இசைத் துறையில் அதிகபட்ச தேசிய விருதுகளை வென்ற ஒரே இசையமைப்பாளர் இளையராஜாதான்.

இதுவரை 5 முறை அவர் தேசிய விருதுகளை வென்றுள்ளார். மூன்று படங்களுக்கு பொதுவான இசையமைப்பாளருக்குரிய விருதினையும், இரு படங்களுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதுகளையும் வென்றுள்ளார்.

சலங்கை ஒலி என்ற பெயரில் தமிழில் வெளியான படம் இந்த சாகர சங்கமம். கே விஸ்வநாத் இயக்கத்தில் கமல் – ஜெயப்ரதா நடித்த தெலுங்குப் படம்.

இப்படத்திற்காக இளையராஜா முதல் தேசிய விருதினைப் பெற்றார்.

இந்த ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பில், பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்காக மீண்டும் சிறந்த பின்னணி இசைக்கான விருதை இளையராஜாவுக்கு வழங்கியது மத்திய அரசு.

Comments

comments