இந்த அஞ்சு படத்தை பார்க்கலைன்னா நெட்ஃபிளிக்ஸ் அக்கவுண்ட் வச்சு வேஸ்ட்.. ஓடிடி-யில் சக்க போடு போடும் 5 படங்கள்

Netflix Best 5 Movies: ஒரு காலத்தில் புது படம் ஏதாவது வந்தால் அதை குடும்பத்துடன் போய் திரையரங்களில் பார்த்து நேரத்தை செலவிடுவோம். ஆனால் தற்போது காலத்துக்கு ஏற்ப இந்த ஒரு விஷயமும் மாறிவிட்டது. அதாவது புதுப்படத்தை தியேட்டரில் மட்டும் தான் போய் பார்க்க முடியும் என்பதற்கு மாறாக வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் ஒரு படத்தை பார்த்து நேரத்தை செலவழிக்கலாம் என்பதற்கு ஏற்ப ஓடிடி தளங்கள் மூலம் புது புது படங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் netflix தளத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஐந்து படங்கள் இருக்கிறது. இதுதான் ஓடிடியில் சக்க போடு போடுது என்று சொல்வதற்கு ஏற்ப அட்டகாசமாக இருக்கிறது. அந்த படங்களை பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

இப்ப இருக்கிற டிரெண்டுக்கு காதலை சொன்ன பிரதீப்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த ஜிகர்தண்டா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வனப்பகுதியில் இருக்கும் பழங்குடியினரை காவல்துறை சித்திரவதை செய்வதை சரி செய்யும் விதமாக ரவுடியாக இருக்கும் அல்லியன், மனைவியின் குடும்பத்துக்காக போராடும் விதமாக சஸ்பென் நிறைந்த திரில்லர் கதையாக காட்சிகள் அமைந்திருக்கும். இப்படத்தை பார்த்து சூப்பராக இருக்கிறது என்று ரஜினி கார்த்திக் சுப்புராஜை கூப்பிட்டு பாராட்டி இருக்கிறார். இப்படம் Netflix இல் ஸ்ட்ரீமிங் ஆகி இருக்கிறது.

ஹிட்மேன்(Hitman) : ரிச்சர்ட் லிங்க்லேட்டர் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படமாக எதார்த்தமான நடிப்புடன் ஹிட்மேன் படம் வெளிவந்தது. நியூ ஆர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் உளவியல் பேராசிரியரான கேரி ஜான்சனை(க்ளென் பவல்) மையமாகக் கொண்டது. அவர் தனது பூனைகளுக்கு உணவளிப்பதிலும், மாணவர்களுக்கு கற்பிப்பதிலும் மும்முரமாக இல்லாதபோது, ​​அவர் உள்ளூர் காவல் துறைக்கு இரகசியமாக வேலை செய்கிறார். பொறியை அமைத்து அவளது கதையைக் கேட்ட பிறகு, கேரி அனுதாபம் அடைந்து, கணவனை விட்டுவிட்டு புதிதாகத் தொடங்கும்படி அவளுக்கு அறிவுறுத்துகிறார். இருப்பினும், மேடிசனின் கணவர் இறந்து கிடக்கும்போது சிக்கல் எழுகிறது. ஜாஸ்பர் சந்தேகமடைந்து மேலும் விசாரிக்க முடிவு செய்கிறார், கேரியின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறார்.

லவ் டுடே: பிரதீப் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு காதல் மற்றும் நகைச்சுவை படமாக லவ் டுடே வெளிவந்தது. இதில் பிரதீப், இவானா, ரவீனா ரவி, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்ப இருக்க சூழ்நிலையை காதல் எந்த அளவுக்கு இருக்கிறது, அதில் யார் உண்மையாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக காட்டும் விதமாக நகைச்சுவையுடன் கலந்து சுவாரசியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு எதார்த்தமான நடிப்புடன் இருக்கும். இப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 100 கோடி அளவிற்கு வசூலை அடைந்திருக்கிறது. ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கி சக்க போடு போட்டு வருகிறது.

நாக்டர்னல் அனிமல்ஸ் (Nocturnal Animals): டாம் ஃபோர்டு இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு திரில்லர் படமாக வெளிவந்தது. இதில் ஆணி ஆடம்ஸ், எட்வர்ட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். முதலாவது ஒரு பெண்ணை (ஆடம்ஸ்) பின்தொடர்கிறது. அவர் தனது 20 வருட முன்னாள் கணவரிடமிருந்து புத்தக கையெழுத்துப் பிரதியைப் பெறுகிறார். இரண்டாவது கதை ஒரு மனிதனைப் பின்தொடர்கிறது (கில்லென்ஹால்) அவரது குடும்பம் வன்முறையாக மாறுகிறது. டெய்லர்-ஜான்சன், கில்லென்ஹாலின் குடும்பத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பார். அதே நேரத்தில் ஷானன் வன்முறை சம்பவத்தை விசாரிக்கும் துப்பறியும் பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறார். இப்படி சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளுடன் படம் திரில்லராக அமைந்திருக்கும்.

சைலன்ஸ்டு (Silenced): ஹ்வாங் டோங்-ஹ்யுக் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு தென் கொரியா குற்ற நாடக படமாக வெளிவந்தது. குற்றங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் இரண்டையும் வைத்து ஆசிரியர்களை குறைந்தபட்ச தண்டனையுடன் விடுவிக்கும் படத்தின் கதையாக இருக்கும். பொதுமக்களை தூண்டிவிடும் அளவிற்கு நான்கு சம்பவங்கள் நடந்த நிலையில் அதைப் பற்றி விசாரிக்கும் காட்சிகள் அமைந்திருக்கும். இப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அதிகமாக பார்த்து வருகிறார்கள்.

ஓடிடி தளத்தில் கலக்கும் படங்கள்

Next Story

- Advertisement -