Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா இந்த படம் மட்டும் நடித்து இருந்தால் விஜய்யை தூக்கி சாப்பிட்டிருப்பாராமே.. கெட்ட நேரம் அந்தக் குழியில் விழுந்து விட்டார்
எல்லாரும் தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு பிறகு விஜய் அஜித் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது சத்தமே இல்லாமல் சாதித்துக் காட்டியவர் தான் நடிகர் சூர்யா. அஜித் விஜய்க்கு பிறகு அதிக அளவில் ரசிகர் பட்டாளங்களை கொண்டவரும் இவர்தான்.
ஆனால் இவரது நேரமோ என்னமோ தெரியவில்லை, சமீபகாலமாக இவரது படங்கள் அனைத்துமே தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
எப்படியாவது சூரரைப்போற்று படம் வெற்றி அடைந்து விடும் என காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கொரானா ரூபத்தில் ஒரு பிரச்சனை வந்து சேர்ந்தது. இதனால் பட வெளியீடு தள்ளிச் சென்று விட்டது.
சூர்யா தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்த நேரத்தில் அவரது கைக்கு வந்து சேர்ந்த கதைதான் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் அந்த கதையை சரிவர சூர்யாவுக்கு சொல்லாததால் இருவருக்குள்ளும் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தனர்.
அதன் பிறகு கௌதம் அந்த படத்தை விக்ரமை வைத்து எடுக்கிறார், எடுக்கிறார், இன்னும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அப்போது கௌதமை தவிர்த்துவிட்டு லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் நடித்தார் சூர்யா.
அதுதான் அவர் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்பதை போல் ஆகிவிட்டது அந்த படத்தின் தோல்வி. அஞ்சானை தவிர்த்து துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருந்தால் தற்போது விஜய் இருக்கும் ரேஞ்சுக்கு வளர்ந்து இருப்பாராம்.
இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. ஏழாம் அறிவு படம் வெளியாகும்போது கிட்டத்தட்ட ரஜினிக்கு அடுத்த இடத்தில் சூர்யா இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.
