அஜித்தின் என்னை அறிந்தால் பேபி அனிகாவா இது..? வைரலாகும் புகைப்படம், வாயை பிளந்த ரசிகர்கள்..!!! - Cinemapettai
Connect with us

Cinemapettai

அஜித்தின் என்னை அறிந்தால் பேபி அனிகாவா இது..? வைரலாகும் புகைப்படம், வாயை பிளந்த ரசிகர்கள்..!!!

News | செய்திகள்

அஜித்தின் என்னை அறிந்தால் பேபி அனிகாவா இது..? வைரலாகும் புகைப்படம், வாயை பிளந்த ரசிகர்கள்..!!!

கடந்த 2015ல் கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றது என்னை அறிந்தால்.கௌதமுக்கென்று இருக்கும் அத்தனை விஷயங்களையும் தவறாமல் உபயோகித்து அவர் எடுத்திருக்கும் படம்தான் ‘என்னை அறிந்தால்’.

ajith_anika

இது அவரது போலீஸ் ட்ரையாலஜியில் கடைசிப்படம் என்று அவர் சொல்லியிருக்கிறார். இது அஜீத்துக்கென்றே எழுதப்பட்ட படம் என்றும், சிம்புவை வைத்துப் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே திடீரென இந்தப் படத்தை எடுக்க முடியுமா என்று கேட்கப்பட்டதாகவும்,

உடனடியாக அமர்ந்து தயார் செய்த படம்தான் இது என்றும், அவரது திரைவாழ்க்கையிலேயே இதுதான் மிகவும் சீக்கிரமாக எடுக்கப்பட்ட படம் என்றும் சொல்லியிருக்கிறார்.

ajith

’என்னை அறிந்தால்’ முற்றிலுமாக ஒரே பாணியில் பயணிக்கும் ஒரு கௌதம் படம். இந்தப் படத்தைப் பார்க்கையில், இன்னும் எத்தனைமுறைதான் கௌதமின் இதே பாணி படங்களைப் பார்ப்பது என்று தோன்றியது.

பனிரண்டு வருடங்கள் முன்னர் 2003ல் காக்க காக்க வெளியானபோது அது பெற்ற வரவேற்பு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதேபோன்ற வரவேற்புதான் ‘வேட்டையாடு விளையாடு’ படத்துக்கும் கிடைத்தது.

Yennai-Arindhaal

இரண்டுமே வெவ்வேறு களங்களில் அமைந்த போலீஸ் படங்கள். ஆனால் என்னை அறிந்தால், இந்த இரண்டு படங்களின் க்ராஸ் ஓவர் என்பது நன்றாகத் தெரிகிறது. காக்க காக்க meets வேட்டையாடு விளையாடு. இதிலும் கடமை தவறாத கம்பீரமான போலீஸ் அதிகாரி.

இதிலும் அவர் பெண்களின்மீது மரியாதை கொண்டவர். இதிலும் போலீஸ் வேலையின்மீது காதல் ஆகிய எல்லாவற்றையும் உடையவர். இதிலும் அந்தப் போலீஸ் அதிகாரி ஒரு ‘அழகான’ பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்.

இதில் திரிஷாவுக்கு குழந்தையாக நடித்தவர் பேபி அனிகா. மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு சகோதரியாகவும் நடித்துள்ளார்.

சில நிகழ்ச்சிகள் மூலம் மலையாளத்தில் பிரபலமாகிவிட்ட அனிகா இப்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, சினேகா ஜோடிக்கு மகளாக நடிக்கிறாராம்.

ஏற்கனவே மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில், மம்முட்டி, நயன்தாராவுடன் இவர் நடித்தது சிறப்பாக இருந்ததால் இந்த வாய்ப்பு வந்துள்ளது.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. பேபி அனிகாவா இது என்று ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top