முதல் பந்திலேயே சேவாக்கை போன்று தன்னாலும் சிக்ஸர் அடிக்க முடியும் என்று ரிஷப் பண்ட் கெத்தாக தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் 42வது லீக் போட்டியில் டெல்லி அணியும் குஜராத் அணியும் பலப்பரீட்சை செய்தன.

இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 208 ரன்களை எடுத்தது. இதனையடுத்து  209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு, 19 வயது இளம் வீரரான ரிஷப் பண்ட் 43 பந்துகளுக்கு 9 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து சாத்தியமில்லாத இலக்கை சாத்தியமாக்கி அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்தார்.

இந்நிலையில் தனது சிக்ஸர்கள் குறித்து பேசிய ரிஷப் பண்ட் “போட்டியில் சிக்சர் அடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது, அதை நிச்சயமாக தவறவிடக்கூடாது. அது போட்டியின் முதல் பந்தாக இருந்தாலும் சரி, கடைசி பந்தாக இருந்தாலும் சரி, தைரியமாக சேவக் போல சிக்சர் அடிப்பேன். மூன்று ரன்னில் சதத்தை தவறவிட்டது வருத்தமில்லை, அணிக்காக வெற்றியை பெற்று கொடுத்ததில் தான் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.