கதை

ஐடி பாய் சிவாவாக சிம்பு, அவருடைய சகோ சூரி ஆடம்பர வாழ்க்கையுடன் சந்தோஷமாக அரட்டை, கலாட்டா என செல்ல, சிம்புவிற்கு நயன்தாராவுடன் நிச்சயதார்த்தம் நடக்கின்றது.

அதன் பிறகு என்ன விடிய விடிய இன்றைய ட்ரண்ட் காதலர்கள் போல் போனில் கடலை, ஆரம்பத்தில் ஜாலியாக செல்ல, ஒரு கடத்தில் சிம்பு தன் X லவ்வர் கதையை ஓபன் செய்கிறார்.ஆண்ட்ரியாவுடன் ஒரு அழகிய காதல், எப்போதும் போல் ஆரம்பத்தில் சந்தோஷமாக செல்ல பின் ஒரு சண்டையில் பிரேக் அப்.

அதன் பிறகு நயன்தாரா சும்மா இருப்பாரா??? சிம்புடன் எது பேசினாலும் சண்டையில் முடிய ஒரு கட்டத்தில் இவர்கள் திருமணத்துல் பெரிய சிக்கல் ஏற்படுகிறது.

அதை தொடர்ந்து சிம்பு யாரை கரம் பிடித்தார் என்பதை 2:15 மணி நேரம் செம்ம கலகலப்பாக கூறியுள்ளார் பாண்டிராஜ்.

விமர்சனம்

சிம்பு-நயன் தாரா கெமிஸ்ட்ரி, பலரையும் பொறாமை பட வைக்கும். படம் முழுவதும் காதல் நிரம்பி வழிகிறது.

சூரி ஐடி பாய் எப்படி சாத்தியம் என்றார்கள், படம் முழுவதும் தன் ஒன் லைன் காமெடியில் அதகளம் செய்துள்ளார்.

சிம்புவை கலாய்க்கும் இடத்திலும் சரி, நயன்தாரவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் இடத்திலும் சரி செம்ம அப்லாஸ் அள்ளுகிறார்.

பாலசுப்ரமணியனின் கலர்புல் ஒளிப்பளிவு, இதையெல்லாம் விட வசனம்.பாண்டிராஜ் இதில் PHD முடித்திருப்பார் போல, வசனம் என்ற ஏரியாவில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

மேலும் இத்தனை வருடம் கழித்து வந்தாலும் படம் ப்ரஸ்ஸாகவே உள்ளது.பிறகு அவ்வபோது படத்தில் வரும் சர்ப்ரைஸ் காட்சிகள்.

படத்தில் கதை இல்லை என்று பாண்டிராஜ் முன்பே சொன்னாலும், கொஞ்சம் கதை என்று இருந்திருக்கலாம்.

ஒரு சில கதாபாத்திரங்களை நம்பியே கதை நகருவது.மொத்தத்தில் இது நம்ம ஆளு ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சிம்பு இஸ் பேக், காதலர்களுக்கு ரசிகர்களுக்கும் இது நம்ம படம்.

ரைடிங் : 2.75/5