விக்ரமில் இரும்புக் கையுடன் நடித்துள்ள சூர்யா.. இணையத்தில் லீக்கான சஸ்பென்ஸ் புகைப்படம்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே இது குறித்த செய்திகள் பரவி வந்த நிலையில் ட்ரைலர் வெளியீட்டின்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதை உறுதிபடுத்தி பேசினார். அதனால் சூர்யாவின் ரசிகர்கள் ட்ரெய்லர் வெளியான பின்பு சூர்யா வரும் காட்சிகளை கண்டு பிடித்து சோசியல் மீடியாவில் வைரல் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ட்ரெய்லரை திரும்பத் திரும்ப பார்த்து பல விஷயங்களை நோட் செய்து வருகின்றனர். தற்போது ஒரு சுவாரசியமான விஷயத்தை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ட்ரெய்லரின் ஒரு காட்சியில் சூர்யாவின் முகம் காட்டப்படாமல் பின் பகுதி மட்டுமே காட்டப்பட்டிருக்கும்.

அதில் சூர்யாவின் வலது கையை சற்று உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால் அது உலோக கை போன்று தெரிகிறது. இது நிச்சயம் ஏதோ ஒரு அடையாளமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதன் மூலம் படத்தில் சூர்யா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்துள்ளது.

suriya-in-vikram
suriya-in-vikram

மேலும் படத்தில் சூர்யாவின் காட்சிகள் இறுதியில்தான் வரும் என்றும், அவருடைய கேரக்டர் மிகவும் சர்ப்ரைசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுவே தற்போது படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாக அமைந்துள்ளது. அதனால் கமலின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சூர்யாவின் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை காண மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Next Story

- Advertisement -