பாகுபலி ஸ்டைலில் டெபிட் கார்டுகளை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி 2. இப்படம் இந்திய திரையுலகில் முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. ஒரே வாரத்தில் ரூ.800 கோடி வசூலித்து சரித்தர சாதனை படைத்துள்ளது. விரைவில் ரூ.1000 கோடி வசூலை நெருங்க உள்ள நிலையில், அதன் பாதிப்பு யாரையும் விட்டு வைக்கவில்லை. பாகுபலி புடவை, பாகுபலி டீசர்ட், பாகுபலி நகைகள் என பல்வேறு வகைகளில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.