எந்த இந்தியனும் செய்யாத சாதனையை படைத்த தமிழக வீரர் நடராஜன்- ஐசிசி பாராட்டு

இந்திய டீம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருப்பது நாம் அறிந்த விஷயமே. ஒரு நாள் தொடரை தோற்ற பின்பு டி 20 தொடரை வென்றனர். தற்பொழுது கடைசி டெஸ்ட் இன்று துவங்கியுள்ளது.

இந்த ஆஸ்திரேலிய தொடரில் எதனை மறந்தாலும், பல வருடங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத பெயராக நடராஜன் மனதில் பதிந்து விடுவார். நெட் பௌளராக டீம்மில் சேர்க்கப்பட்ட இவர் அதன் பின்னர் வருண் மற்றும் சைனிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான டீம்மில் இடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அழகாக பயன் படுத்தினார்.

ஷமி , உமேஷ், பும்ரா என காயம் பட இன்று டெஸ்ட் போட்டிகளிலும் இடம் பிடித்துவிட்டார். ஜடேஜா, விஹாரி, பும்ரா, அஷ்வின் என வெளியேற தாகூர், அகர்வால் மற்றும் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் (இருவரும் அறிமுக போட்டியில்) விளையாடி உள்ளனர். இதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ஐசிசி ட்விட்டரில் “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நடராஜனை வரவேற்கிறோம். ஒரே சுற்றுப்பயணத்தில் இடம்பெற்று, ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் நடராஜன் தான்” என பாராட்டியுள்ளனர்.

screen shot of icc tweet

நட்டு இதுவரை வேட் மற்றும் லபூஷான்கே விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.