டெஸ்ட் போட்டியில் 80 ஓவருக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறைக்கு இனி அனுமதி கிடையாது. 20 ஓவர் போட்டிகளில் நடுவரின் முன்பு மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேட்டுகளின் அளவுகளில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள், பேட்டுகளில் அளவு எட்ஜகளில் 40 மில்லி மீட்டருக்கு மிகாமலும், மொத்தமாக இடையில் 67 மில்லி மீட்டருக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும், இந்த அளவை அளக்க அம்பையர்கள் அளவுகோலுடன் வருவார்கள்.

களத்தில் வன்முறை நோக்குடன் மிக மோசமாக நடந்து கொள்ளும் வீரரை கால்பந்து பாணியில் வெளியேற்றுவது, – வீரர்களை விக்கெட் எடுத்தவுடன் பந்து வீச்சாளர் அளிக்கும் மோசமான செண்ட்-ஆஃப் இதற்கு ரெட் கார்டு கொடுக்கப்படும்

அம்பையரிடம் உடல் ரீதியாக தொட்டாலோ அல்லது தாக்குதல் நடத்துவது போல் அனுகினாலோ அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார், அந்த ஆட்டத்தில் மீதம் உள்ள ஒவர்கள் ஆட முடியாது, அந்த அணி இருக்கும் வீரர்களை வைத்து தான் ஆடியாக வேண்டும்

அதிகம் படித்தவை:  ஹீல்ஸ் + படிக்கட்டு ! மனைவியை செல்லமாக கலாய்க்கும் ரோஹித் சர்மா ! போட்டோ உள்ளே !

டெஸ்ட் இன்னிங்சில் 80 ஓவர்களுக்கு பிறகு கூடுதலாக டி.ஆர்.எஸ். வாய்ப்பு வழங்கும் முறையை ரத்து செய்வது – மொத்தம் இனி ஒரு இன்னிங்சுக்கு இரண்டு டி.ஆர்.எஸ் மட்டுமே வழங்கப்படும்.

ரன் எடுக்க ஓடுகையில், கிரீசுக்குள் நுழைந்தாலும்கூட ஸ்டம்பு தாக்கப்படும் சமயத்தில் வீரரின் பேட்டோ அல்லது கால்களோ அந்தரத்தில் இருந்தால் ரன்-அவுட் வழங்கும் முந்தைய முறையை தளர்த்தி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது

கேட்சுகள் பவுண்டரிக்கு சென்று தட்டு விட்டு பிடித்ததை போல் பிடித்தால் இனி விக்கெட் தரப் படாது, பந்தின் முதல் தொடுதலிலேயே கேட்சை பிடித்தாக வேண்டும் இல்லையெனில் அது பவுண்டரி என் அறிவிக்கப்படும்
உள்ளிட்டவை புதிய விதிகளில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

செப்டம்பர் 28-ந்தேதி தொடங்கும் வங்காளதேசம்-தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்-இலங்கை ஆகிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் இருந்து இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்படும். இந்தியாவை பொறுத்தவரை நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து புதிய விதிமுறைக்குட்பட்டு விளையாடும்.

அதிகம் படித்தவை:  ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணி ’பீல்டிங்’!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விதிமுறை மீறி விளையாடிய ஆஸ்திரேலியாவின் உள்ளூர் வீரருக்கு முதல்முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடந்தது. அப்போது, பேட்ஸ்மேன் அடித்த பந்தை, குயின்ஸ்லாந்து வீரர் லாபூஸ்சாங்க்னி, ஃபீல்டிங் செய்வது போல் பாவனை செய்ததுடன், ரன் அவுட் செய்ய முயன்றார்.

இது ஐசிசியின் விதிமுறைக்கு எதிரானது என்பதால், எதிரணிக்கு நடுவர்கள் 5 ரன்களை கூடுதலாக வழங்கினர். புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்து பிறகு அதில் சிக்கிய முதல் அணி குயின்ஸ்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.