Politics | அரசியல்
இனிமேல் தான் தரமான சம்பவம் காத்திருக்கிறது. ஐ.ஏ.எஸ் சகாயம்
மாணவர்களின் முன்னிலையிலேயே ஐ ஏ எஸ் சகாயம் தரமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் ஊழல் மற்றும் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
ஐ.ஏ.எஸ் சகாயம்
மாணவர்களின் முன்னிலையிலேயே ஐ ஏ எஸ் சகாயம் தரமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் ஊழல் மற்றும் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
அரியலூர் காந்தி பள்ளியில் மக்கள் பாதை இயக்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஐ.ஏ.எஸ் சகாயம் இந்த கோரிக்கையை மாணவர்களிடம் கொடுத்தார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கண்டுகளித்தார் அவர் மாணவர்கள் இடையே பேசும்போது பசுமையை வளர்ப்பதற்காகவே மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கினார்.
அப்போது பேசிய அவர் மாணவர்கள் பருவத்திலேயே பல்வேறு காரியங்களுக்கு லஞ்சம் தருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர்கள் தவிர்த்தால் சமுதாயம் மேம்படும் எனவும் கூறினார். தாய்மொழியாம் தமிழை வளர்க்க மாணவர்கள் பாடுபடவேண்டும் எனவும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்திக்க சகாயம் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் வேலைவாய்ப்புகளை பெற்றவர்கள் லஞ்சம் வாங்குவது தவிர்த்து முழுமையாக எனது நேர்மையான பணியை தொடரும் எனவும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என கூறினர்.
பல கிராம நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்றும் சொற்றொடரை இருப்பது பார்க்க முடிவதாக தெரிவித்தார்.
லஞ்சத்திற்கு எதிரான மாற்றங்களும் ஊழலுக்கு எதிரான மாற்றங்களும் நிலவி வருவதாகவும் ஒரு காலத்தில் நேர்மையாக இருந்து நிர்வாகம் எப்படி ஊழலுக்கு மாறியதோ அதேபோல மறுபடியும் ஊழல் நிர்வாகம் போய் நேர்மையான நிர்வாகம் உருவாகும் என தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் லஞ்சம் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் கேட்க வேண்டும் என கூறினார்.நேர்மையான ஊழல் அரசியலும் நிர்வாகமும் மற்றும் சமூகத்தில் உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை என தெரிவித்தார்.
