சினேகன் ஒரு களிமண் மாதிரி, அழகான ஒரு குழந்தை. எப்படி வளைத்தாலும் வளையும். இந்தச் சமுதாயத்தில் நிறைய ஏமாற்றங்களால் சில வேஷம் போடப்பட்டிருச்சு.

என்னைப் பொறுத்தவரை ஒரு களத்துக்குப் போவதற்கு முன்பு அந்தக் களத்துக்கு என்ன ஆயுதமோ அதை நான் தீட்டிக்கொள்ள ஆசைப்படுவேன். ஒரு பாடலாசிரியராய் மட்டுமே அனைவராலும் நான் அறியப்பட்டவன்.

சிலபேர் ‘இவர் டைனமிக் கல்யாணம்னு ஒண்ணு பண்ணியிருக்கார்’னு விமர்சனம் வந்தது. எந்த விமர்சனத்தைக் கண்டும் நான் பயப்படவில்லை. ஏனென்றால், எந்தப் புத்தனும் என்னைக் குறை சொல்லவில்லை. குறை சொன்ன யாரும் புத்தரும் இல்லை.

தவிர, நல்லது கெட்டது இரண்டையும் பார்த்துச் சொல்வதுதான் விமர்சனமே தவிர, கெட்டதை மட்டுமே சொல்வது விமர்சனம் இல்லை. அது பொறாமையின் வெளிப்பாடு.

அந்த வகையில் சினேகன் சராசரி விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண விவசாயி மகன். படித்தது பன்னிரண்டாம் வகுப்புதான். அதற்குப் பிறகு டீச்சர் ட்ரெயினிங் முடித்தேன்.

அதிகம் படித்தவை:  ஜெயலலிதா, கலைஞர், மோடி யாருக்கும் இப்படி இல்ல! தொடர்ந்து கொலை மிரட்டல்! காப்பாற்ற அஜித்துக்கு ஒரு கடிதம்..

இலக்கிய, இலக்கணங்களை முறைப்படி கற்கவில்லை. ஆனால், பாடல் துறைக்கு வந்துவிட்டோம். பிறகு பாடல்களை எழுத வேண்டும் என்ற சூழ்நிலையில், முடிந்த அளவுக்குத் தமிழ் நூல்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

இதற்காக இரண்டு ஆண்டுகள் எந்த வேலைக்கும் நான் செல்லவில்லை. எந்த ஒரு இடத்திலும் நமக்குத் தடுமாற்றம் வரக் கூடாது என்பதற்காகக் கற்றேன்.

ajith

ஆனால், அதையும் தாண்டி ஏதாவது தடுமாற்றமும் வரத்தான் செய்யும். ஏனென்றால், கற்றவனுக்கும் சறுக்கத்தானே செய்யும். என்னைப் பொறுத்தவரை, நான் பாடலாசிரியரோ கவிஞரோ, நடிகனோ இல்லையோ… ஒரு நல்ல ரசிகன். அந்த ரசிப்புத் தன்மைதான் என்னைக் கவிஞனாய் ஆக்கியிருக்கு.”

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரின் மனங்களில் ஊடுறியவர் சினேகன். இவர் தான் வெற்றியாளர் என்பது பலரின் கருத்து. ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்தவர்.

அதிகம் படித்தவை:  நடிகர் விக்ரம் இயக்கத்தில் விஜய் ,அஜித் ? - அழைப்பு விடுத்த விக்ரம்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பல ஊடகங்களின் நேரலைகளில் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர் தன் கவித்துவ உணர்வுகளால் அனுபவங்களை பகரிந்துகொண்டார்.

2008 ம் ஆண்டு வெளியான ஏகன் படத்தில் பாட்டெழுதினேன். அப்போது அஜித் யாரிடமும் அவ்வளவாக பேசாமல் அமைதியாக தான் இருப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் ஹிரோக்களுக்கு பாட்டெழுதும் முன் அவர்களின் மேனரிசத்தை முழுமையாக கவனிப்பேன். அஜித் கீழே விழுந்து, முளைத்து எழுந்து மரமாய் நின்றவர். அவர் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை.

பொது மக்களோடு கலப்பதில்லை என எல்லாருக்கும் தெரியும். அவரை மக்களிடம் கொண்டு போய் எளிமையாக சேர்க்க வேண்டும் என்பதற்காக இப்படத்தில் நான் எல்லாருக்கும் ஃபிரண்டு, இப்போ மாறிப்போச்சு ட்ரண்டு என பாடலை எழுதினேன் என கூறினார்.