இளைய தளபதி விஜய் அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் அளித்தது பரவலாக எல்லா ஊடகங்களிலும் பேசப்பட்டது.

ஆனால் இது குறித்து இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அனிதா வீட்டிற்கு சென்று வந்த விஜயை பாராட்ட மாட்டேன், ஏனென்றால் இது அவருடைய கடமை என்று பதிவிட்டிருக்கிறார்.

இது ரசிகர்கள் மத்தியில் சின்ன சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல் பாரதியின் பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறேன் என்று பெரியாரை பாரதியுடன் ஒப்பிட்டு அவர் இட்ட பதிவிக்கும் பல ட்விட்டர் வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சேரனின் தற்போதைய பதிவுகள் அனைத்தும் ஏதோ ஒரு சர்ச்சையை தாங்கியே வருகிறது. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: புடுங்குறது, நகட்டுறது, கிழிக்குறது இப்படி ஒவ்வொரு பதிவிலும் ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறாரே சேரன்.