Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்! ஆர்யா மட்டும்தான் வேணும்.. ஷாக் அளித்த எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்

ஆர்யாவிற்காக கடைசி வரை காத்திருப்பேன். நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் அபர்ணதி கூறி இருப்பது அவர் ரசிகர்களுக்கு ஷாக் அளித்துள்ளது.
வட இந்தியாவில் பிரபலமான கலர்ஸ் டிவி தமிழில் கால் பதித்தது. இத்தொலைக்காட்சியை ரசிகர்களிடம் கொண்டு செல்ல தொடங்கப்பட்டது தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி. பழங்காலத்தில் சுயம்வரமாக கொண்டாடப்பட்ட நிகழ்வு தான் இந்த ரியாலிட்டி ஷோ பின்னணியாக கொண்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியின் இந்தி பதிவில் இதுவரை பிரபலங்கள் ஒருவரை தேர்வு செய்தாலும் அவர்களை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், தமிழின் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆர்யா கண்டிப்பாக திருமணமே செய்து கொள்வார் என அவர் ரசிகர்களே கடுமையாக நம்பினார். நிகழ்ச்சியும் தொடங்கியது. ஒருவர் ஒருவராக வெளியேற்றப்பட்டனர். வந்திருந்த 16 போட்டியாளர்களில் சிலர் மட்டும் மக்களை கவர்ந்தனர். அதில் அபர்ணதியும் ஒருவர். தமிழ்நாட்டு பெண்ணான அபர்ணதிக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இயங்கி வந்தது.
ஆனால், அபர்ணதி இறுதி சுற்றுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார். எல்லா போட்டியாளர்களும் சாதாரணமாக வெளியில் கிளம்ப, ஏன் என்னை வேண்டாம் என ஆர்யாவிடம் ஒரு பிரச்சனை செய்தார் அபர்ணதி. இவரை சமாதானம் செய்ய அக்குழுவிற்கே 5 முதல் 6 மணி நேரம் எடுத்ததாக கூறப்படுகிறது. இவரின் வெளியேற்றம் ரசிகர்கள் பலருக்கும் கவலையில் முடிந்தது. இந்நிலையில், நான் யாரையுமே திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அபர்ணதி அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறார்.
இதுகுறித்து, அவரின் சமீபத்திய பேட்டியில், என்னோட ஸ்பெஷல் டைம் அப்புறம் தான் ஆர்யா மீது எனக்கு காதல் வந்தது. நான் ஏதாவது அழுது பேசுனா, ஆர்யாவின் கண்களும் கலங்கும். இதை போல சில விஷயங்களால் தான் நான் ஆர்யா மீது காதலை வளர்த்துக் கொண்டேன். முதல் சில சுற்றுகளில் வெளியேறி இருந்தால், இத்தனை வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். இப்போது தான் ஆர்யவை அதிகமா காதலிக்கிறேன். இதை குருட்டுத்தனமான காதல் என்று கூட சொல்லலாம். அவருக்கு 50 வயது ஆனாலும், ஆர்யாவுக்காக காத்திருப்பேன். ஆர்யா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கட்டும். ஆனா, நான் அந்தக் கல்யாணத்துக்குப் போகமாட்டேன். நானும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஏன்னா, என் நினைவுகளில் ஆர்யாதான் இருப்பார். வீட்டிலேயே எங்க அம்மாவுக்கும் இப்போ ஆர்யாவைப் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. சாமிகிட்ட வேண்டுறப்போகூட, ‘ஆர்யா மனசு மாறணும்’னு வேண்டிக்க ஆரம்பிச்சிட்டாங்க எனத் தெரிவித்து இருக்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எல்லா போட்டியாளர்களும் ஆர்யாவை வாங்க போங்க என அழைக்க வாடா, போடா என தெறிக்க விட்டவர் அபர்ணதி என்பது குறிப்பிடத்தக்கது.
