நடிகை ராகுல் ப்ரீத்சிங் தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கவர்ச்சிக்கு நோ சொல்லி விடுகிறாராம்.

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழில், ‘தடையறத் தாக்க’ மற்றும் ‘புத்தகம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார். அத்துடன், தமிழிலும் முன்னணி நடிகையாகும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

துப்பறிவாளன்’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும், அவரை, சில கமர்ஷியல் இயக்குனர்கள், கவர்ச்சி கதாநாயகியாக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அதற்கு தடை போட்டதுடன், ‘அனுஷ்கா மாதிரி பர்பாமென்ஸ் நடிகையாக வேண்டும் என்பது தான், என் லட்சியம்…’ என்று, ‘டயலாக்‘ பேசி, அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறார்.