பொதுவாகவே டிஆர்பி குறையும் நேரங்களில் எல்லாம் சிம்புவை சூடு ஏற்றி தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிற வழக்கம் விஜய் தொலைக்காட்சிக்கு உண்டு.

இதற்கு முன்பு ஒரு முறை அவர் லைவ்வாக அழுது… அப்படியே எழுந்து போன காட்சி ஒன்று, இன்றளவும் சிம்புவை வாரி வகுடெடுக்கும் மீம்ஸ் பார்ட்டிகளின் தீனியாக இருக்கிறது. அதையே எவ்வளவு நாளைக்கு ஓட்டிக் கொண்டிருப்பது? அடுத்த ஸ்கிரீனை ஓப்பன் பண்ணியது விஜய் டி.வி. காபி வித் டி.டி. நிகழ்ச்சிதான் அது.

அங்கு சூப்பர் ஸ்டார் பற்றிய தனது எண்ணத்தை வெளிப்படுத்திய சிம்பு, டேய்… யாரு வேணும்னாலும் வந்துட்டு போகட்டும்டா. நான் சினிமாவுலேயே இல்ல. என்னை விட்ருங்கடா என்று ஒரேயடியாக அதற்கு புல் ஸ்டாப் வைத்துவிட்டார். அதோடு எழுந்து போயிருந்தால் நோ காமெடி. அதற்கப்புறம் அவர் பேசியதுதான் காமெடி.

என்னுடைய டிரீம், என்னுடைய எய்ம், என்னுடைய லைஃப் டைம் அச்சீவ்மென்ட், இந்த உடம்பை விட்டு, இந்த உயிரை ஆண்டவன் எடுக்கறதுக்கு முன்னாடி, நான் ஒரு விஷயம் பண்ணணும் அப்படின்னா, இந்த உலகத்துல எந்த மூலைல வேணாம் ஒரு குழந்தை பொறக்கட்டும். அது சைனாகாரனுக்கு பொறக்கட்டும், அது ஆப்பிரிக்காகாரன் குழந்தையா இருக்கட்டும், அது அமெரிக்காகாரன் குழந்தையா இருக்கட்டும், அது என் தமிழினத்தைக் கொன்ன ஸ்ரீலங்கனோட குழந்தையா கூட இருக்கட்டும். எனக்கு அதப் பத்தி கவலை கிடையாது.

அன்னிக்கு அந்த குழந்தை பொறக்கும் போது, அந்தக் குழந்தைக்கு அன்னைக்கு சோறு கிடைக்கும், எஜுகேஷன் கிடைக்கும், தங்கறதுக்கு ஒரு இடம் கிடைக்கும், உடம்பு சரியில்லன்னா டிரீட் பண்ண ஆஸ்பிட்டல் கிடைக்கும். அந்த குழந்தை சந்தோஷமா, நிம்மதியா எந்த டென்ஷனும் இல்லாம அதுக்கு செக்யூரிட்டி கிடைக்கும்.

இந்த அஞ்சு விஷயமும் உலகத்துல எல்லா குழந்தைக்கும் நடக்கறதுக்கு சிலம்பரசன் ஒருநாள் காரணமா இருக்கான் அப்படின்னு சொன்னா, அன்னைக்கு தாங்க நான் சூப்பர் ஸ்டார், அதுவரைக்கும் நான் சூப்பர் ஸ்டார் கிடையாது” என்றார்.