Connect with us

Cinemapettai

என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன்; எதற்காக இப்படி சொல்கிறார் சிம்பு…

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன்; எதற்காக இப்படி சொல்கிறார் சிம்பு…

நடிகர் சிம்பு தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் எனக் கூறி இருப்பது சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, இளம் நடிகராக பெரும் உயரத்தை எட்டி இருக்கிறார். படத்தில் நன்றாக நடித்தாலும் சிம்புவின் மீது கோலிவுட் வட்டாரத்தில் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தது. படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார், கதை விவகாரத்தில் தலையிடுவார் என பல புகார்கள் அடிக்கொண்டே இருந்தனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஏஏஏ படம் தோல்வியை அடைந்தது. இது சிம்புவால் தான் என படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளர் மைக்கேலும் பிரச்சனையை பஞ்சாயத்திற்கு எடுத்து சென்றனர். அப்படி இப்படி என்று எல்லா தடைகளையும் முடித்து கொண்ட சிம்பு தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், சிம்புவை செமையாக பாராட்டியது சிம்பு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவித்தது. சினிமா ஒரு பக்கம் என்றாலும், சமூக பிரச்சனைகளிலும் சிம்பு தனது பங்கை செய்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் வீட்டில் உண்ணாவிரதம் இருந்தது முதல் கடைசியாக காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் கர்நாடக மக்களிடம் வைத்து கோரிக்கை வரை எல்லாவற்றிலும் பலரை கவர்ந்தார் சிம்பு. இந்நிலையில், எழுமின் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியது தான் இன்றைய இணையத்தில் ஹாட் டாக்காக மாறி இருக்கிறது. சிம்பு தெரிவித்துள்ளதாவது, நடிகர் சங்க தேர்தலின் போது எனக்கும், விஷாலுக்கும் மாறுப்பட்ட கருத்து இருந்தது உண்மை தான். அதனால் தான் நான் அவருக்கு எதிராக பேசினேன். எதையுமே எனக்கு மறைமுகமாக பேசத்தெரியாது. இப்படி வாழ்வதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தனை பிரச்சனை இருந்து அடிக்கல் நாட்டு விழாவிற்கு விஷால் என்னை அழைத்தார். அப்போதே அவருடன் இருந்த மனகசப்பு நீங்கி விட்டது.s

நான் படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறேன் என பலரும் புகார் தெரிவிக்கிறார்கள். இனி கண்டிப்பாக என் காட்சிகளுக்கு சரியான நேரத்தில் வருவேன். பேனர் தகராறில் என் ரசிகர் இறந்தது பெரும் மன கஷ்டத்தை தந்து இருக்கிறது. இனி எனக்காக யாரும் பேனர் வைக்க வேண்டும் என கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அதுபோல, என் குழந்தைகளை கண்டிப்பாக பள்ளிக்கு அனுப்ப மாட்டேன். அங்கு கற்று கொள்ள தானே அனுப்புகிறோம். ஆனால், தற்போது யார் முதலில் வருவார்கள் என போட்டியை வளர்த்து விடுகிறார்கள். இது நல்லதல்ல. பெற்றோர்கள் முதலில் பிள்ளைகளின் திறமையை புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top