Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன்.. உண்மையை உடைத்த யோகிபாபு!
தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ள நடிகர்தான் யோகிபாபு.
மேலும் தற்போதெல்லாம் இவருடைய படத்திற்கு தமிழகத்தில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் யோகி பாபு அவரைப் பற்றி கூறியிருக்கும் தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கிய யோகிபாபு தற்போது ஹீரோவாகவே நடிக்கும் அளவிற்கு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளார் என்பது நாம் அறிந்ததே.
இவ்வாறிருக்க யோகிபாபு அவரைப் பற்றி, ‘நான் எப்பொழுதும் காமெடியன் தான். ஹீரோவுக்கு தகுதி இல்லாத முகம் என் முகம். அதனால் நான் காமெடியனாகவே நடிக்க விரும்புகிறேன்’ என்று பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இதனை பார்த்த யோகி பாபுவின் ரசிகர்கள் உண்மையை உடைத்து கூறியதற்கு யோகி பாபுவிற்கு பாராட்டுகளை குவித்த வண்ணம் இருக்கின்றனர்.

yogi-babu-01
