Connect with us
Cinemapettai

Cinemapettai

அயோக்கியா படத்தோட சினிமாவுக்கு முழுக்கு போட்ட பிக் பாஸ் பிரபலம்.. இது என்னடா விஷாலுக்கு வந்த சோதனை.?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அயோக்கியா படத்தோட சினிமாவுக்கு முழுக்கு போட்ட பிக் பாஸ் பிரபலம்.. இது என்னடா விஷாலுக்கு வந்த சோதனை.?

தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சனா கான். இவர் ‘சிலம்பாட்டம்’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’, ‘ஆயிரம் விளக்கு’, ‘தலைவன்’ மற்றும் ‘அயோக்கியா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

மேலும் இவர் நடித்த படங்களில் வெளிப்படுத்திய அபாரமான நடிப்புத் திறமையாலும், கவர்ச்சியாலும் தமிழ் இளைஞர்களின் மனதில் ஓர் இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் தற்போது திடீரென திரையுலகில் இருந்து விலகப் போவதாக சனா கான் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது சனாகான் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் மனித குலத்திற்கு சேவை செய்யப்போவதாகவும், தன்னை படைத்தவனின் கட்டளையை பின்பற்ற போவதாகவும், எனவே தான் திரையுலகில் இருந்து விலகுவதாக முடிவு செய்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் சனா இனிமேல் சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகளைத் தன்னிடம் யாரும் கேட்க வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

இந்நிலையில் திரையுலகிலிருந்து சனாகான் திடீரென விலகுவதாக வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சனா கான் நடிப்பில் ‘டோம் டிக் அண்ட் ஹரி 2’ என்ற ஹிந்தி படம் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

san-khan

san-khan

மேலும் சனா கானின் இந்த அறிவிப்பைக் கேட்ட ரசிகர்கள் சோகக் கடலில் மூழ்கி உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top