Tamil Cinema News | சினிமா செய்திகள்
இப்போது மட்டுமல்லா நான் நடிக்கவே மாட்டேன்: புரட்சி தலைவர் மகளின் ஓபன் ஸ்டேட்மெண்ட்
அப்பா சினிமாவில் பெரிய நடிகராக இருந்தாலும், நான் கண்டிப்பாக நடிப்பிற்கே வர மாட்டேன் என திவ்யா சத்யராஜ் தெரிவித்து இருக்கிறார்.
வில்லனாக நடித்தாலும் தமிழ் சினிமாவில் செம அங்கீகாரத்துடன் இருப்பவர் சத்யராஜ். அதை தொடர்ந்து, பல படங்களில் வெற்றி நாயகனாகவும் நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இன்று வரை சமூக பிரச்சனைகளில் முதல் ஆளாக குரல் கொடுத்து வருபவர்.
பிரம்மாண்ட படைப்பான பாகுபலியில் கட்டப்பாவாக சத்யராஜ் நடித்தது அனைவர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கட்டப்பாவிற்கு இவர் கொடுத்த உயிரால், பிரபலங்களின் மெழுகு சிலையை வடிவமைக்கும் மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகம் இவர் மெழுகு சிலையை நிறுவ இருக்கிறது. கோலிவுட்டில் இருந்து இந்த அங்கீகாரத்தை பெறும் முதல் நடிகர் இவர் தான்.
இவர் 1979ம் ஆண்டு மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு திவ்யா மற்றும் சிபி என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். சிபி சத்யராஜ் சினிமாவில் நடிகராக இருக்கிறார். ஆனால், மகள் திவ்யா தனக்கு சினிமாவே வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்.
திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். தப்பான ஒரு மருந்தை பரிந்துரைக்க கூறிய கம்பெனி குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். இது பலதரப்பிலும் பாராட்டுக்களை பெற்றது. 12 மாநிலங்களில் 36 சமையல் அறைகளை நிறுவி, தீவிரமா செயல்பட்டுட்டு இருக்கிற அக்ஷய பாத்ரா அமைப்பின் விளம்பர தூதராக இருக்கிறார்.
திவ்யாவிற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பழக்கமே இல்லையாம். அதிலும், சமூக வலைத்தள பக்கங்களை விரும்பாதவர். திவ்யா சாதாரண மொபைலை மட்டுமே வைத்திருக்கிறார். ஒரு பெரிய நடிகரின் மகளாக இருக்கும் திவ்யாவின் இந்த பழக்கங்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், திவ்யா சினிமாவில் நடிக்க இருப்பதாக அடிக்கடி செய்திகள் வெளிவரும். அதையுமே சில மணி நேரங்களில் அறிக்கை வெளியிட்டு இல்லை என மறுத்து விடுவார். ஆனால், அவரின் வரவை தமிழ் சினிமா ஆவலாக எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கிறார். இதுகுறித்து, சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ள திவ்யா, இப்போது மட்டுமல்ல எப்போதும் நான் சினிமா பக்கம் எக்காரணத்தை கொண்டும் வர மாட்டேன். ஒரு சக்ஸஸ்ஃபுல் ஊட்டச்சத்து நிபுணராக மட்டுமே இருக்க வேண்டும் என்று தான் நான் ஆசைப்பட்டு கொண்டிருக்கேன் என்றார்.
