fbpx
Connect with us

Cinemapettai

இனி நடிக்க மாட்டேன் – கமலின் அதிர்ச்சி முடிவு!

Kamalahasan

News | செய்திகள்

இனி நடிக்க மாட்டேன் – கமலின் அதிர்ச்சி முடிவு!

பல தேசிய விருதுகளை வென்ற தமிழகத்தின் நடிப்புத் தூணாக விளங்கும் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் தற்போது அரசியலில் நுழைவது குறித்து தீவிரமாக உள்ளார்.

இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளும் கட்சி குறித்து பல சாடல்களை காட்டமாக முன்னிறுத்துகிறார். ட்விட்டர் மட்டுமல்லாது தனியார் தொலைகாட்சிகளுக்கு அளிக்கும் சிறப்பு பேட்டிகளிலும், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியிலும் தனது அரசியல் துவக்கம் குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் நடிப்பது குறித்த கேள்விக்கு “எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழுவதும் ஈடுபாடோடு செயல்படவேண்டும் என்று நினைப்பேன், நான் இயக்குனராக களமிறங்க ஆசைப்பட்டவன் ஆனால் காலம் என்னை நடிகனாக்கியது, தற்போது அரசியலில் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று நுழைகிறேன், நடிப்பையும் கவனித்துக் கொண்டு அரசியலையும் கவனிக்க என்னால் முடியாது.

ஒரு நேரத்தில் ஒன்றை செய்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும், அதனால் அரசியல் நுழைவிற்கு பிறகு நான் நடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் நிறுத்திவிடுவதுதான் முறையானது.” என்று கூறியுள்ளார்.kamalhasan

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: உருப்புடியா இருந்த ஒரே நடிகரும் போயாச்சா? யோசிச்சு பார்த்தா கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவுல யாருமே இல்லையே!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top