Connect with us
Cinemapettai

Cinemapettai

prabhudeva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வேன்: பிரபல நடிகை ப்ளீச்

பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வேன் என நடிகை நிகிஷா பட்டேல் கூறி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என புகழப்படுபவர் பிரபு தேவா. இவர் பிரபல நடன இயக்குனர் சுந்தரத்தின் இரண்டாவது மகனாவார். சுமார் நூறு படங்களில் இதுவரை நடித்து இருக்கிறார். மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலமாக சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். தற்போது, நடிகராகவும், இயக்குனராகவும் வெற்றி கண்டு இருக்கிறார்.

பிரபுதேவாவிற்கு, ராம்லாத் என்ற மனைவி இருந்தார். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர். திருமண வாழ்வு சுமூகமாக சென்று கொண்டு இருந்த நேரம், மூத்த மகன் 2008 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். இது பிரபுதேவாவிற்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. கலக்கத்தில் இருந்த பிரபுதேவாவிற்கும், நயன்தாரா பெரும் துணையாக இருந்தார்.

இதனால், இருவர் இடையே காதல் உண்டானது. நயன்தாராவிற்காக தனது முதல் மனைவியை பிரபுதேவா விவகாரத்து செய்தார். நயனும் கிறிஸ்துவத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். இதனால், இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என கிசுகிசுக்கள் தொடங்கியது. அதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியது. ஆனால், அது திருமண அறிவிப்பு இல்லை காதல் முறிவு. இருவரும் காதலை முறித்து கொள்வதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து, நடிப்பில் இருவருமே பிசியாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள நான் தயார் என நிகிஷா பட்டேல் அறிவித்து இருக்கிறார். என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர், பாண்டிமுனி படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆகிறார். கஸ்தூரி ராஜா வெகு நாட்கள் கழித்து இயக்க இருக்கும் இப்படம் த்ரில் ஜானரில் உருவாக இருக்கிறது.

இதுகுறித்து, தன் சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ள நிகிஷா, எனக்கு கோலிவுட்டை பிடிக்கும். அதிலும் பிரபுதேவாவை பிடிக்கும். அவரின் குடும்பமும் என் குடும்பமும் நெருக்கமாக பழகி வருகிறோம். பிரபுதேவாவுடன் நடிப்பீர்களா என அனைவரும் என்னிடம் கேட்டுகிறார்கள். ஆனால், நான் அவரை திருமணம் செய்து கொள்ளவே தயாராக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இத்தகவலால் கோலிவுட்டே பரபரப்பில் இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top