தமிழ்நாட்டில் இப்போது பலருக்கும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என்ற கவலை இருக்கிறது. இதற்காக விவசாயிகளும் கடந்த 40 நாட்களுக்கு மேலாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக போராட்டங்கள் நடக்கிறது. இந்நிலையில் மதுரை வந்த நடிகை நக்மா பேட்டியாளர்களிடம் பேசும்போது, டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்கவுள்ளேன். விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.