தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகைகள் பலரும் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் மீது தொடர்ந்து பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கும் அவர் தொல்லை கொடுத்ததாக ஏஞ்சலினா ஜோலியும், பால்ட்ரொவும் தற்போது குற்றம்சாட்டியுளனர்.

Radhika Sarathkumar
Radhika Sarathkumar

இந்த நிலையில் ஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் ஐஸ்வர்யா ராய்க்கும் வலை வீசு உள்ளது என தற்போது தெரியவந்து உள்ளது.

ஐஸ்வர்யா ராயின் டேலன்ட் மேனேஜராக இருந்த சிமோன் ஷெப்பீல்டு வெயின்ஸ்டீன் பற்றி தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை நடிகைகள் தற்போது வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர்.

radhika-sarathkumar

இதை பார்த்த பிற பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு Me too என்ற டேக்கை பயன்படுத்துகிறார்கள்.

தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறி Me too என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.

Radhika Sarathkumar Saree Photos Stills

நீங்கள் ஒரு ஃபிலிம் ஸ்டார், உங்களுக்கு யார் பாலியல் தொல்லை கொடுப்பது என்று ஒருவர் ராதிகாவிடம் கேட்டுள்ளார்.

என்னது உங்களுக்கு பாலியல் தொல்லையா. அதிர்ச்சியாக உள்ளது என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உங்களுக்கு பவர் உள்ளது. அவர்களின் பெயரை தெரிவித்து அசிங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அமைதியாக இருப்பதால் அவர்கள் தனது செயலை தொடரக்கூடும் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.