இரும்புத்திரை படத்தில் நடித்த விஷால் தனக்கு நாயகன் வேடம் வேண்டாம். வில்லனாக நடிக்கிறேன் என கூறியதாக இயக்குனர் மித்ரன் தெரிவித்துள்ளார்.

vishal

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’. விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இப்படத்தை தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஷால், சமந்தா, அர்ஜூன் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று இருக்கிறார்கள். டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக இராணுவ வீரனாக இப்படத்தில் விஷால் நடிக்கிறார். டெக்கீஸ் உலகை அசலாக பிரதி எடுத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது உதவி இயக்குனராக இருந்த விஷாலின் படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன். பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இப்படம், பல கட்டமாக தள்ளிப்போனது. தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்க போராட்டம் வேறு படத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இதை தொடர்ந்து, போராட்டம் முடிந்ததையடுத்து, முறையாக அனுமதி பெற்று வரும் 11ந் தேதி படத்தை விஷால் வெளியிட இருக்கிறார்.

இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் மித்ரன் மனம் திறந்து இருக்கிறார். முதலில் இப்படத்தை விஷாலின் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால், மலையாளத்தில் வில்லனாக நடித்த ஆர்யாவிற்கு கோலிவுட்டில் வில்லனாக மனம் இல்லை. இதை தொடர்ந்து, விஷால் நானே இப்படத்தின் வில்லனாக நடிக்கிறேன் என அடம் பிடித்தார். பிறகு நான் செய்த சமாதானத்தாலே நாயகன் வேடம் ஏற்று இருக்கிறார்.

irumbuthirai vishal

அதை போல, இப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டு இருக்கிறது. சமந்தா ரசிகர்களுக்கு இப்படம் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை வெளியாகும் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் என நம்பப்படுகிறது.