பிராண்ட் மாஹி: இந்தியாவை பொறுத்தவரை எம்.எஸ்.தோனி என்பவருக்கு பல முகங்கள், பல பரிணாமங்கள்  உண்டு. அவரவருக்கு எது பிடிக்குமோ அதை வைத்து தங்கள் மனதில் தோனி பற்றி ஒரு அபிப்ராயம் வைத்துருப்பார்கள். விக்கெட் கீப்பர், கேப்டன் கூல், பைக் பிரியர், சிக்ஸர் மன்னன், பினிஷெர், தல டோனி, சென்னை சூப்பர் கிங் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

தி அன் டோல்ட ஸ்டோரி: இந்தியாவின் சின்ன ஊரில் பிறந்து எப்படி அவர் இந்திய அணிக்காக விளையாடினார் என்று அவர் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் எம்.எஸ்.தோனி – தி அன் டோல்ட ஸ்டோரி. அவர் வாழ்க்கையில் சந்தித்த  பிரச்சனைகள், தடைகள்; அதை எவ்வாறு தகர்த்தெறிந்து,  டிக்கெட் காலெக்டராக இருந்த அவர் இந்திய டீம்மின் முதுகெலும்பு ஆனார் என்று இப்படம் பார்த்தால் நாம் அறிந்து கொள்ளமுடியும். இதில் தோணியாக சுஷாந்த் சிங்கும், அவர் மனைவி சாக்ஷியாக கிரா அத்வானி நடித்தனர்.

அதிகம் படித்தவை:  இரண்டு வருடங்களில் இத்தனை ஹிட் படங்கள்,நம்பர் 1 இடத்தில் விஜய் சேதுபதி...

கிரா அத்வானி: தோனியாக சுஷாந்த் சிங் கலக்கியிருந்தாலும், அவர் மனைவி ரோலில் சிறுது நேரமே வந்தாலும், நம் மனதில் அப்படியே ஒட்டிக் கொள்ளும் வகையில் தான் இவர் நடிப்பு அமைந்தது. தோனி பற்றி தெரிந்து கொள்ள, இவர் தோனி மற்றும் சாக்ஷி  இருவருடனும் சில நாட்கள் இருந்து அவர்களின் லைப் ஸ்டைலை கவனித்தார் என்பது கூடுதல் செய்தி.

தற்பொழுது ஒரு இன்டெர்வியூவில் ‘நீங்கள் யாருடன் கேண்டில் லைட் டின்னெர் டேட் போக விருப்பம்?’ என்று கேட்ட கேள்விக்கு ‘கேண்டில் லைட் டின்னெர் டேட் பற்றி எனக்கு தெரியவில்லை, இருந்தாலும் டின்னெர் (ஏன் என்றால் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது) அது மாஹியுடன் தான், நான் அவரை பற்றி இன்னும் தெரிந்துக் கொள்ள ஆசை’ என்று கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஐபிஎல் போட்டிகளில் தோனி இருக்கும் அணி தான் எப்போதுமே டாப்! : சில சாதனை பட்டியல்

இந்திய டீமில்,இப்பொழுது  விராட் கோஹ்லி தான் மிகவும் ஹாட் ஆன பிளேயர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தோனி சாக்ஷியுடன் முதல் சந்திப்பு: ‘அவர்கள் இருவருமே தலைக்கனம் துளியும் இல்லாதவர்கள். அவர் குழந்தையின் பையை ஒரு கையில் வைத்துக் கொண்டு, தன் குழந்தையை அதீத பாசத்துடன் கவனித்துக்கொண்டார். அவர்கள் இருவரும் அவ்வளவு கேஷுவலாக இருந்தனர். தோனிக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்தி’ என்றும் தோனியுடன் தன் முதல் சந்திப்பு பற்றியும் கூறினார்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்: 3 இடியட்ஸ் படம் பார்த்த பின்பு தான் கிரா அத்வானியின் அப்பா, உனக்கு பிடிக்கின்ற வேலையை செய், அது எந்த துறையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கிறீன் சிக்னல் கொடுத்தாராம்.