நடிகர் பிரசன்னா தற்போது பல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த பவர் பாண்டி படம் அவருக்கு மீண்டும் நல்ல பெயரை தந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது திரைப்பயணத்தை பற்றியும், தனுஷை பற்றியும் மனம் திறந்த பேசியுள்ளார், குறிப்பாக தனுஷை பற்றி பேசுகையில் ” ஆரம்பத்தில் எல்லாரும் யோசித்தது போல நானும் தனுஷ் லக் லா தான் ஜெயித்துள்ளார் என்ற தப்பான கண்ணோட்டத்தில் இருந்தேன், ஆனால் அவரது திறமை நேரில் பார்த்து பிறகு நான் நினைத்தது மிக பெரிய தப்பு என்று உணர்ந்தேன்.

அவர் மிக சிறந்த திறமையாளர், நடிகர், பாடகர், இயக்குனர் என எல்லா விதத்திலும் கடுமையாக தான் உழைக்கிறார். பவர் பாண்டி யில் நடித்த எல்லாருக்குமே அவர் தான் நடிப்பு சொல்லி கொடுத்தார். இதுவரைக்கும் பார்க்காத நடிப்பு தான் எல்லோரிடத்திலும் இருக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டார் என்று பிரசன்ன கூறினார்.