புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிவகார்த்திகேயனுக்காக பெயரை மாத்திக்கிறேன்னு சொன்னேன்.. அன்றே கணித்த நடிகை.. யார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் சிவகார்த்திகேயனை பற்றிக் கூறியுள்ள சம்பவம் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீசான படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவான இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான படங்களில் விஜயின் தி கோட், ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்களை அடுத்து, அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமரன் இடம்பிடித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிவகார்த்திகேயன் கேரியரில் இதுவரை நடித்த படங்களில் அதிக வசூலித்த படமாக இப்படம் அமைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸின் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து, சுதா கொங்கராவில் இயக்கத்தில் புற நானூறு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிவாவுக்கு வில்லனாக ஜெயம்ரவி நடிப்பதாக கூறப்படுகிறது. அதபின், வெங்கட் பிரபு படத்திலும், டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் பற்றிக் கூறிய ராம்யாகிருஷ்ணன்

இந்த நிலையில், சினிமாவில் பிஸியாகியுள்ள சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் ஹீரோவாகி இருக்கிறார். சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ண ஒரு பேட்டியில் சிவாவை பற்றிப் பேசியிருக்கிறார்.

அதில், ’’ ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நான் நிறைய டாஸ்க்குகளை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்திருகிறேன். அவர் திறமைசாலி. அவர் மட்டும் ஹூரோவாகவில்லை என்றால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். அவர் ஹீரோவாகி வெற்றியடைந்துவிட்டதாக ’’தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, அடுத்து, ஜோடி நம்பர் 1, அது இது எது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமையான தொகுப்பாளராகப் பணியாற்றி, சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இன்று ஹீரோவாகிவிட்ட சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Trending News