அஜித் நடித்த விவேகம் படம் வசூலில் பல சாதனைகள் படைத்தது வருகிறது.கடந்த வாரம் ரிலீஸ் ஆனா இப்படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தது.

ரசிகர்களுக்கு எப்படியோ படம் தாறு மாறாக பிடித்துபோக மற்ற விமர்சனகளை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.இன்றும் கூட பல தியேட்டரில் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

யு டியுப்பில் ப்ளூ சட்டை என்று அழைக்கப்படும் பிரபல விமர்சகர் தமிழ் மாறன் விவேகம் படத்தை தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.இவ்வளவுதான் கொந்தளித்த தல ரசிகர்கள் சும்மா இருப்பார்கள்? எச்சரிக்கை,மிரட்டல் என அவர்கள் கோபத்தை காட்டி வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  தல57 படத்தின் வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த இயக்குனர்..

ரசிர்கள் மட்டும் இல்லாமல் பல சினிமா நட்சத்திரங்கள் ப்ளூ சட்டை விமர்சகருக்கு எதிராக தங்கள் ஆதங்கத்தை காட்டி வருகிறார்கள் என்பது தான் ஆச்சர்யம்.தற்போது நடிகர் விவேக் ட்விட்டரில் கருத்தை தெரிவித்துள்ளார்.இதில்,அஜித்தே கண்ணியமாக இருக்கும் போது, நாம் என்ன சொல்ல? நான் மதிக்கும் ஒரே ப்ளூ சட்டை இவர்தான் என்று மறைந்த அப்துல் கலாம் புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார்.