சின்னத்திரையில் நடன நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானவர் ரின்ஸன். இன்று நண்பன், பவர்பாண்டி என படங்களில் அசத்தி வருகின்றார்.

இந்நிலையில் நண்பன் படம் நடிக்கும் போது விஜய் அவருடன் அத்தனை எளிமையுடன் பழகினாராம், இதுக்குறித்து ரின்ஸனே கூறியுள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘விஜய் அண்ணாக்கு மட்டுமில்லை, அவருடைய பேமிலிக்கு கூட என்னை மிகவும் பிடிக்கும்.

அதிகம் படித்தவை:  சர்கார் பாடலின் இரண்டு மணி நேர முடிவு! விவேகம் சாதனையை முறியடித்ததா?

நான் வாழ்க்கையில் சாதித்த பிறகு தான் எல்லோருடனும் போட்டோ எடுக்கவேண்டும் என்று ஒரு கொள்கையோடு இருந்தேன், இது ஷங்கர் சாருக்கு தெரியும்.

ஒரு நாள் விஜய் அண்ணாவுடன் எல்லோரும் போட்டோ எடுக்க, அவருக்கு என் கொள்கை பற்றி தெரிந்து விட்டது.

உடனே என்னை அழைத்து “நான் இப்போ உன்னோடு போட்டோ எடுக்க வேண்டும்” என்று கூறினார், அன்றைய நாளை என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது.

அதிகம் படித்தவை:  மீண்டும் சர்ச்சையில் விஜய் ரசிகர்கள் – அப்படி என்னாதான் செய்வாங்க.

மேலும், பவர் பாண்டி படத்தின் மூலம் இன்னும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது, தனுஷ் அண்ணனே என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார்’ என கூறியதோடு மட்டுமில்லாமல் தனக்கு இயக்குனராக வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார் ரைஸிங் ஸ்டார் ரின்ஸன்.