Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யின் இந்த படத்தில் நடித்திருக்கலாம் மிஸ் செய்துவிட்டேன்.! புலம்பும் பிரபல நடிகர்
சினிமாவில் தற்பொழுது கடந்த 1 மாத காலமாக ஸ்ட்ரைக் நடந்து வருகிறது இதனால் படபிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது, புது படமும் வெளிவரவில்லை, அதனால் பல சினிமா நடிகர்கள் இருக்கும் நேரத்தை தனது குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்கள் விக்ரம் தனது குடும்பத்துடன் கேரளா சென்றுள்ளார் இது போல் பல நடிகர்கள் குடும்பத்துடன்தான் இருக்கிறார்கள்.
அதே போல் நடிகர் கருணாகரன் ஸ்ட்ரைக் நடப்பதால் தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் ஷூட்டிங் இல்லாமல் இருப்பதால் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறேன் தனது குழந்தைக்கும் பள்ளி விடுமுறை என்பதால் அவர்களுடன் நேரத்தை அதிகமாக செலவிடுகிறேன் இப்படியே ஸ்ட்ரைக் போனால் இந்த வாழ்க்கை பழகிவிடும் போல் உள்ளது. வெளியில் பொய் யாரையாவது மீட் பண்ணலாம் என சென்றேன் விஷால், விக்ராந்த் ஆகியோரை சந்தித்தேன் அவர்கள் ஜிம், விளையாட்டு என பிஸியாக இருக்கிறார்கள்.
பின்பு தனது படத்தை பற்றி பேசினார் நடிகர் சிவாவுடன் நடிக்க ஆசை அது தற்பொழுது ரவிக்குமார் படத்தின் மூலம் நிறைவேற போகுது அதேபோல் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியை தந்தது, இன்னும் விஜய் படத்தில் நடிக்கவில்லை விஜய் படத்தில் நடிக்க ஆசை, அதுவும் நண்பன் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கும் ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது அப்படி நடித்திருந்தால் விஜய்யுடன் முதல் படம் நண்பனாக இருக்கும் விஜய்யுடன் விரைவில் நடித்துவிட வேண்டும் என கூறியுள்ளார்.
