விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றால் அதில் நமது டிடி-யும் ஒருவர் இவர் காபி வித் டிடி என்ற ஷோ மூலம் பல சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார், இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்தும் பெற்றுவிட்டார் அதன் பிறகு கவுதம் வாசுதேவ் எடுத்த ஆல்பம் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தார்.

ajith
ajith

இப்பொழுது பாடல் ஒருசில படம் என கொஞ்சம் பிஸி தான் தொகுப்பாளினி டிடி என்னதான் முன்னணி நடிகர்களை பேட்டி எடுத்தாலும் நம்ம தல அஜித் மட்டும் டிடி ஷோவில் இதுவரை பங்கு பெற்றதே இல்லை, இருந்த போதிலும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாலும் ஆனால் அந்த சமையத்தில் டிடி யின் தனிப்பட்ட பிரச்சனைகளால் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார் தொகுப்பாளினி டிடி.

dd

மேலும் அஜித்தை பேட்டி எடுக்கலனாலும் பரவால, அஜித்துடன் நடிக்கவில்லை என்றாலும் பரவா இல்லை, அஜித்தை இதுவரை நேரில் கூட கண்டதே இல்லை அதனால் அவரை ஒரு முறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்பது தான் எனது ஆசை என பெரும் ஏக்கத்துடன் கூறியுள்ளார் தொகுப்பாளினி டிடி.