Tamil Cinema News | சினிமா செய்திகள்
இருந்த அஜித் மாதிரி இருக்கணும் பிரபல சீரியல் நடிகை ஒரே போடு.!
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார் படபிடிப்பு மிக விரைவாக நடைபெற்று வருகிறது படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது இந்த நிலையில் சமீபத்தில் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் இன்று விசுவாசம் படத்தின் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது
சினிமா வட்டாரத்தில் அஜித்தை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது அவருடன் பணியாற்றிய பலருக்கு தெரியும் எப்படிப்பட்டவர் என்று அதை அவர்கள் அதிகமாக பகிர்ந்துள்ளார், அஜித்தை ரோல்மாடலாக நினைக்க எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள் இது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் மௌனராகம் சீரியலும் ஒன்று இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நந்தினியாக நடித்திருப்பவர் தமிழ்ச்செல்வி, இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்
அந்த பேட்டியில் அஜித்தை பற்றி கூறியுள்ளார், அஜித் சிறுவயதில் எப்படி ஆட்டம் போட்டார் தெரியுமா, ஆனால் வளர்ந்த பிறகு எப்படி அமைதியாக இருக்கிறார், இவர் இப்படி அமைதியாக இருப்பது, கடவுள் வளர்ச்சி கொடுத்து உயரத்தில் வைக்கும் போது நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது, இப்படி ஒரு நல்ல பண்பு அஜித்திடம் தான் இருக்கிறது, இருந்த அஜித் மாதிரி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்
