என்ன ஆட்டம்.. ஆக்ரோசம்.. ‘என் பசங்க கிட்ட அந்த இந்திய வீரரின் ஆட்டத்தைப் பார்த்து வளரும்படி கூறினேன்’- இயன் பெல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சிறந்த வீரராக கருதப்படுபவர் இயன் பெல். இவர், மைதானத்தில் ஆக்ரோசமாக செயல்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி விளையாடும் விதத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகிய உலகம் போற்றும் வீர்களின் வரிசையில் அடுத்து யார் பேர் சொல்லும்படி சிறந்த விளையாட்டு வீரராகவும் சாதனையாளரும் வரப் போகிறவர்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீர்களிடமும் ரசிகர்களிடமும் எழுந்தன.

ஆனால்,கிரிக்கெட் கடவுளாகப் போற்றப்படும் சச்சின் சாதனைகளை நெருங்குபவராக விராட் கோலி இருக்கப்போகிறார் என்று அப்போது யாரும் கணித்திருக்கவில்லை. ஆனால் இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் பல்வேறு சாதனைகளை கிரிக்கெட் படைத்துள்ளார். படைக்கவுள்ளார்.

தில்லியைச் சேர்ந்த விராட் கோலி, தில்லி அணிக்காக 2006 ஆம் ஆண்டு விளையாடிய நிலையில், 2008 ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த 19 வயதினருக்காக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி கேப்டனாகப் பொறுப்பேற்று கோப்பை வென்று கொடுத்தார். அதே வயதில், சர்வதேசத் தொடரில் இலங்கைக்கு எதிராக களமிறங்கினார். பின்னர், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றார்.

தன் சிறப்பான பேட்டிங் திறமையால் 2013 ஆம் ஆண்டு பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். 2013 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் ஜொலித்து அணிக்கு பெருமை தேடித்தந்தார். இதுவரை டெஸ்டில் 114 போட்டிகளில் 193 இன்னிங்ஸ்களில் விளையாடி 9971 ரன்கள் அடித்துள்ளார். இதில், அதிகபட்சம் 254 ரன்கள் என சராசரி 88.74 வைத்துள்ளார். ஒரு நாள் தொடரில், 295 போட்டிகளில் பங்கேற்று, 283 இன்னிங்களில் விளையாடி, 13,906 ரன்களும், அதிகபட்சமாக 183 ரன்களும் அடித்து, 58.18 சராசரி வைத்துள்ளார். டி20 தொடரில் 125 போட்டிகளில் 117 இன்னிங்ஸ்களில் பங்கேற்று, 4188 ரன்களும், அதிகபட்சமாக 122 ரன்களும் அடித்து, 48.69 சராசரி வைத்துள்ளார்.

இதில், ஒரு நாள் தொடரில் 50 சதங்களும், டெஸ்ட் தொடரில் 29 சதங்களும் அடித்து சாதனை படைத்துள்ள கோலி, டெஸ்டில் இன்னும் ஒரு சதம் அடித்தால் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டான் பிராட்மேனின் ( 52 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம்) சாதனையை முறியடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது வங்கதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் இந்தியா அணி விளையாடி வரும் நிலையில், 1-0 என்ற கணக்கில் டெஸ்டில் முன்னிலையில் உள்ளது. வரும் 27 ஆம் தேதி நாளை 2 வது டெஸ்டில் விளையாடவுள்ளது. இதில் ஒரு சதம் அடித்தால் விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிக சதம் அடித்த பேட்ஸ்ஸ்மேன்களின் வரிசையில் 16வது இடம் பிடிப்பார்.

இந்த நிலையில் இத்தனை சாதனை படைத்துள்ள இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் கோலியின் ஆட்டத்தைப் பார்த்து வளரும்படி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் இயான் பெல் தன் குழந்தைகளிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

மிகச்சிறந்த கவர் டிரைவ் அடிக்கும் வீரர் என்று வருகையில் விராட் கோலியை தாண்டி இன்னொரு வீரரைப் பார்ப்பது கடினம். கவர் டிரைவ் மட்டுமல்ல, அவரது விளையாடு ஸ்டைல், பேட்டிங் மீது அவருக்குள்ள ஆசை, எதிரணிக்கு அவர் கொடுக்கவிரும்பும் போட்டி இதெல்லாம் நன்றாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் பெல் இந்திய வீரர் விராட் கோலியை புகழ்ந்துள்ள செய்தி வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டில் நாடு தாண்டி, வீரர்களின் திறமையை மற்ற அணி வீரர்கள் அங்கீகரிப்பது தொடர வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News