fbpx
Connect with us

புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை ஓ.பன்னீர்செல்வம்

panneerselvam

புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள்.

யாருடன் தொடர்பில் இருக்க வேண்டும் யாருடன் தொடர்பில் இருக்க கூடாது என ஜெயலலிதா எங்களுக்கு சுட்டி காட்டி உள்ளார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக சசிகலா இருந்தாரா என்ற கேள்விக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார்.

ஜெயலலிதா சொன்ன வேலையை மட்டுமே நான் செய்தேன். மற்றவை குறித்து நான் சிந்தித்தது கூட இல்லை.

2012 க்கு பிறகு நான் சசிகலாவிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவரிடம் எந்த உத்தரவும் பெறவில்லை – முதலமைச்சர். 2012 லிருந்து ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை சசிகலாவிடம் தொலைபேசி வாயிலாக கூட பேசியது கிடையாது

முதல்-அமைச்சர் பதவிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார்கள்.அவர்கள் என்ன அசிங்க படுத்தியதாக நினைக்கவில்லை. நான் வகித்த முதல்வர் பதவிக்கு அவமானம் நேர்ந்ததாக கருதுகிறேன்.

வாக்களித்த மக்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏக்கள் செய்ல்பட வேண்டும்.

என்னுடைய பின்னணியில் தி.மு.க, பாஜா.க யாரும் யாரும் இல்லை. புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை.

கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் எனது சுற்றுப்பயணம் தொடரும்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நான் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பேன். பின்வாசல் வழியாக பதவியை பிடிக்க வேண்டும்.

நான் எந்த பதவியிலும் இனி ஜெயலலிதாவால் நியமிக்கபடகூடாது என திட்டமிட்டார்களா என தெரியவில்லை.ஆனால் அம்மா என்மீது நம்பிக்கை வைத்து அதன் பின் பல பதவிகள் வகித்து வந்தேன்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top