குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல் தொடர்பான செய்தி:

கேள்வி : என் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். தேனிலவின் போது அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருந்தது தெரியவந்தது.

இதனால் எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிட்டது. அவளோ, அந்த காதலை துண்டித்து விட்டதாகவும், புதிய வாழ்க்கையை தொடரலாம் என்றும் கூறினாள். எனக்கும் அது தான் ஆசை.

ஆனால் நான் ஏமாந்துவிட்டதாக உணர்கிறேன். அவள் எனக்கு மீண்டும் துரோகம் செய்ய மாட்டாள் என்பதற்கு என்ன உத்தரவாதம். நீங்கள் தான் ஆலோசனை கூற வேண்டும்.

அதிகம் படித்தவை:  சன்னி லியோனிக்கு ரசிகர் மன்றம் தொடங்கிட்டாங்க

மன நல மருத்துவர் அதிதி குல்கர்னியின் பதில்:

இப்படியொரு சூழலில் உங்கள் மனைவி மீது சந்தேகப்படுவதும், துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக உணர்வதும் இயற்கையான ஒன்று தான். உங்களுக்குள் உள்ள உறவு மிக பலவீனமானதாக, பாதிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.

இதற்கான தீர்வு என்னவென்றால், இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று உங்களது மனைவியுடன் முதலில் மனம் விட்டு கேளுங்கள். உங்கள் மனதில் பட்டதை கூச்சமின்றி உங்கள் மனைவிடம் தெரிவியுங்கள்.

உங்களது கோபத்தையெல்லாம் புறந்தள்ளி வைத்துவிட்டு, அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாமா என உங்கள் உள் மனதிடம் கேளுங்கள். இதற்கு காலம் பிடிக்கும். உங்களுக்குள் நீங்கள் சமரசம் செய்து கொள்ளுங்கள். அவரை திருமணம் செய்ததற்காக வருத்தப்படாதீர்கள்.

அதிகம் படித்தவை:  பைக்கில் விஜய் செய்த அட்டகாசம் - அஜித் படம் பாப்பிங்களா என விஜய்யிடம் கேட்ட ஆர்.ஜே..

உங்கள் மனைவியை முதன்முதலில் பார்த்தபோது உங்களுக்கு பிடித்த விசயம் என்ன என்பதை நினைவில் கொண்டு வாருங்கள். நம்பிக்கை ஒரு முறை தகர்ந்து விட்டால் அதனை மீண்டும் கட்டமைக்க கொஞ்சம் காலம் எடுக்கும். நீங்கள் இருவரும் மனநல ஆலோசகர் ஒருவரை அணுகுவதும் நல்லது.