அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் குறித்து பலரும் அறிந்திடாத பல புதிய தகவல்களை நம்முடைய newstig தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வகையில்

இன்று, அஜித்தை வைத்து “பாசமலர்கள்” என்ற படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சந்திர மேனன் அவர்கள் அஜித் குறித்து பகிர்ந்து கொண்ட சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாமா..?

அவர் கூறியதாவது,

அஜித் எப்படி பாசமலர்கள் படத்தில் நடிக்கும் போது இருந்தாரோ, அதே எளிமை, வேகம், அன்பு என அதுவும் மாறவில்லை.  அஜித்துடன்  25 வருடத்திற்கு முன்பு நான் பணியாற்றினேன். அப்போது, சில முன்னணி நிறுவனங்களின் விளம்பரத்தில் அஜித் நடித்துறுக்கிறார். என்னுடைய படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் அஜித்.

 

இவரின் வெற்றி போதை அவரின் தலைக்கு ஏறாமல் பார்த்துகொண்டார் அதனால் தான் சிக்கலான சினிமா துறையில் இன்றும் காலூன்றி நிற்க முடிகிறது.

சமீபத்தில் அஜித்குமாரின் பெற்றோரை பார்க்க நேரிட்டது.அஜித்தின் இந்த எளிமையான, அன்பனா நடத்தை அவர்களிடம் இருந்து தான் பெற்றுள்ளார் என்பதை அப்போது உணர்ந்தேன்.

அஜித்திற்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இயக்குனர் சுரேஷ் சந்திர மேனன் தற்போது சூரியாவின் TSK படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.