சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்,  விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய மார்க்கெட் வைத்திருப்பவர். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

அதிகம் படித்தவை:  ஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..

இப்படம் பொங்கலுக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர், 6 வருடங்களுக்கு பிறகு பண்டிகை நாள் ஒன்றில் சூர்யா படம் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொங்கலுக்கு சூர்யாவுடன் களத்தில் இறங்குவது விஷாலும் தான், ஆம், விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரும்புத்திரை படமும் பொங்கலுக்கு வரவுள்ளதாம்.

அதிகம் படித்தவை:  அஜித் பற்றி முதன் முதலாக வெளிப்படையாக கூறிய விஷால்

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார், யுவன் இசையமைத்து வருகின்றார்.