Tamil Cinema News | சினிமா செய்திகள்
சொல்லுங்கடா…எதுக்குடா நான் சரிப்பட்டு வரமாட்டேன்….: கதறிய இஷாந்த் சர்மா!
புனே: ‘டெஸ்ட் போட்டிகளுக்கான பவுலர் மட்டும் இல்லை எனவும், எல்லா விதமான கிரிக்கெட்டிலும் தன்னால் சாதிக்க முடியும் எனவும்,’ பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடுபவர் இஷாந்த் சர்மா. இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துவங்கியது முதலே இவருக்கு பெரும் சர்ச்சையாகவே உள்ளது.
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், இவரை எடுக்க ஒரு அணியும் முன்வரவில்லை. பின் காயம் காரணமாக ஒவ்வொரு வீரர்களாக விலகிய போது, ஒரு வழியாக இஷாந்த் சர்மாவுக்கு சேவக் புண்ணியத்தில் பஞ்சாப் அணி அடைக்கலம் கொடுத்தது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இவரால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சாதிக்க முடியவில்லை. இதனால் இஷாந்த் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமே லாயக்கு, மற்றவிதமான போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என கருத்து எழுந்தது.
இதுகுறித்து இஷாந்த் சர்மா கூறுகையில்,’ டி-20 போட்டிகளில் நினைத்த அளவு என்னால் சாதிக்க முடியவில்லை என்பது உண்மை தான். ஆனால் அதற்காக டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாட விரும்புகிறேன் என அர்த்தம் இல்லை. இது தான் இந்தியாவில் உள்ள கெட்ட பழக்கம், ஒரு தொடரில் சாதிக்க முடியவில்லை என்றால், இவர் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என முத்திரை குத்திவிடுகின்றனர். அதனால் மற்றவர்களின் விமர்சனங்களைப்பற்றி கவலைப்படாமல், நமக்கு தோன்றும் எண்ணங்களை செயல்படுத்தவேண்டும். ’ என்றார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
