ஆரம்பத்தில் இருந்தே யதார்த்த நாயகனாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி. மற்ற நடிகர்களைப்போன்று ஹீரோவுக்குரிய பில்டப் காட்சிகளை தனக்காக வைப்பதை அவர் தவிர்த்து வருகிறார். முக்கியமாக ஹீரோ என்றால் ஜெயித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது வேண்டாம். அவனும் தோல்வியை சந்திக்க வேண்டும் என்று நிஜவாழ்க்கையின் பிரதிபலிப்பாக கதைகள் இருக்க வேண்டும் என்று டைரக்டர்கள் ஓப்பனாக சொல்கிறார் விஜய்சேதுபதி.

அந்தவகையில், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள கவண் படத்தில் ஐடி பீல்டு சம்பந்தப்பட்ட கதையில் நடித்தபோதும், தனக்கே உரிய பாணியில்தான் நடித்திருக்கிறாராம். அதன்காரணமாக, தனது படங்களில் ஹீரோக்களுக்கு கொடுக்கும் சின்னச்சின்ன பில்டப் காட்சிகளைகூட இந்த படத்தில் விஜய்சேதுபதிக்காக வைக்கவில்லையாம் கே.வி.ஆனந்த். அதனால், தான் இதுவரை இயக்கிய படஙக்ளில் இந்த கவண் படத்தில் ஒரு இயல்பான, யதார்த்தமான கதையோட்டம் இடம்பெற்றிருப்பதாக சொல்கிறார் கே.வி.ஆனந்த்.