Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கையில் வெண்ணைய வச்சிட்டு நெய்க்கு அலையணுமா! யாரையும் நம்பி நா இல்ல தெனாவட்டில் விக்கி

அஜித் கைவிட்ட நிலையில் விக்னேஷ் சிவன் யாரையும் நம்பி நான் இல்லை என தெனாவெட்டில் உள்ளார்.

vignesh-shivan

இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படம் பாதியிலேயே டிராப்பானது. இதனால் அடுத்து விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகள் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் பெரிய நடிகரின் பட வாய்ப்பு பறிபோய் உள்ளதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் வருவது கடினம்.

மேலும் அஜித் அந்த படத்தை நிராகரித்ததற்கான காரணம் விக்னேஷ் சிவனின் ஆட்டிட்யூட் சரி இல்லை, கதை பிடிக்கவில்லை என பல காரணங்கள் இணையத்தில் உலாவி வருகிறது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்று தற்போது வரை வெளியாகவில்லை.

Also Read : விக்னேஷ் சிவனின் வாழ்க்கையை சல்லி சல்லியாய் நொறுக்கும் அஜித்.. ரெடியாக உள்ள அடுத்த ஆப்பு

ஆனால் இப்போது அஜித் படம் போனால் என்ன பெரிய ஸ்டாரை கைவசம் உள்ளார் என்ற தெனாவட்டில் விக்னேஷ் சிவன் உள்ளாராம். அதாவது கையில் வெண்ணெய் இருக்கும்போது எதுக்கு நெய்க்கு அலையனும் என்ற முடிவுக்கு தற்போது விக்னேஷ் சிவன் வந்துள்ளாராம்.

பெரும்பாலும் காமெடி படங்களை இயக்கி வந்த விக்னேஷ் சிவன் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையை தயார் செய்து வருகிறாராம். அதாவது இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.

Also Read : விக்னேஷ் சிவன் போல் மகிழ்திருமேனிக்கும் வரும் ஆப்பு.. ரீ என்ட்ரி இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தையில் லைக்கா

கோலிவுட் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவை வைத்து படம் இயக்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் விக்னேஷ் சிவன் உள்ளார். மேலும் இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறதாம்.

அதுமட்டுமின்றி அஜித்தின் ஏகே 62 படத்திற்கு முன்னதாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் விக்னேஷ் சிவன் உள்ளாராம். ஆகையால் விரைவில் இந்த படத்தின் கதையை தயார் செய்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : லோகேஷுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இதுதான் வித்தியாசம்.. அஜித் டீலில் விட உண்மையான காரணம்

Continue Reading
To Top