Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜயிடம் எல்லாமே பிடிக்கும் அதுதான் எனக்கு பிடிக்காது – விஷால்
தளபதி விஜய் குறித்த தனது எண்ணத்தை நடிகர் விஷால் முதல் முறையாக மனம் திறந்து இருக்கிறார். செல்லமே படத்தின் மூலம் நடிப்புலகில் கால பதித்தவர் விஷால். நெடு நெடு உயரம், கருப்பு தேகம் என அவரின் தோற்றம் திரையுலகில் நல்ல ரீச் கொடுத்தது. சண்டக்கோழி படத்தின் மூலம் மாஸ் ஹீரோ அந்தஸ்த்தையும் பெற்றார். முதல் சில படங்கள் வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு அவருக்கு தோல்வியே நிலைத்தது. இதனை தொடர்ந்து, நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் அவர் தன் நண்பர்கள் துணையுடன் தேர்தலில் போட்டியிட விரும்பினார்.
எப்போதும் சத்தமில்லாமல் நடக்கும் போராட்டங்கள் அந்த வருடம் ஏகப்போக சண்டைகளுடன் நீதிமன்றம் வரை சென்று இறுதியாக நடந்து முடிந்தது. அத்தேர்தலில், விஷாலின் பாண்டவர் அணி வெற்றி அடைந்தது. நாசர் நடிகர் சங்க பொறுப்பேற்றார். விஷால் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
இதை தொடர்ந்து, அதே ரீதியில் தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் கேள்வி கேட்கப்பட்டு பதில் வராத நிலையில், தேர்தலில் களமிறங்கினார். விளைவு இந்த தேர்தலுக்கு அவருக்கு சாதகமே. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இதை தொடர்ந்து, திரையுலகிற்கு பல நல்ல முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தனை வருட சினிமாவில் தொடர்ந்து 50 நாட்கள் போராட்டம் செய்து வைக்கப்பட்ட கோரிக்கையும் பிரபலங்களுக்கு சாதகமாகவே முடித்து கொடுத்து இருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஷால் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் சில முக்கிய கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சில நடிகர்களின் புகைப்படங்கள் திரையிடப்பட்டு அவர்களிடம் பிடிக்காத விஷயத்தை சொல்லுமாறு கேட்டு கொண்டனர். அஜித்தின் புகைப்படத்தை பார்த்த விஷால், அவரை யாராலுமே தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரின் பி.ஆர்.ஓவிடமே நான் இதை சொல்லி விட்டேன். இது அவரிடம் எனக்கு பிடிக்காத விஷயம்.
நடிகர் ராதாரவியிடம் புகைப்படத்தை பார்த்ததும், ராதா அண்ணன் பொதுவெளியில் பேச தேர்வு செய்யப்படும் வார்த்தைகள் எனக் குறிப்பிட்டார். இப்படி எல்லா பிரபலங்களுக்கும் அசராமல் ஒரு பிடிக்காத விஷயத்தை சொன்ன விஷால் ஒருவருக்கு மட்டும் ஒன்றுமே சொல்லவில்லை. நடிகர் விஜயின் புகைப்படம் ஒளிப்பரப்பட்டது. இவர் குறித்து பிடித்த விஷயம் பேச சொன்னால், 30 நிமிடத்திற்கும் அதிகமாக பேசுவேன். பிடிக்காத விஷயம் என அமைதி காத்தவர். இவரின் எனக்கு பிடித்த விஷயம் அவரின் தன்னம்பிக்கை, அமைதி.
திரையுலகில் இவரின் பிரச்சனை இன்னொருவருக்கு வந்து இருந்தால் என்றோ வெளியேறி இருப்பார்கள். ஆனால், என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் இன்று இருப்பது இவர் மட்டும் தான் என்றார். இவரையே எனக்கு பிடிக்கும். பிடிக்காத விஷயம் என்று ஒன்றுமே இல்லை. ஒருவேளை அதுவே பிடிக்காத விஷயமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
