Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர்ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை.. ரஜினிகாந்த் அதிரடி

சூப்பர்ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை…ரஜினிகாந்த் அதிரடி
சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து ரஜினிகாந்த் என்றோ சொன்ன ஒரு தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எப்போதுமே நடிகர்களுக்கு ஒரு தனி தனி ஸ்டைல் சாதாரணமாகவே இருக்கும். பல வேஷங்கள் போட வேண்டி இருக்கும் ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கும். ஆனால், ஒரு சிரிப்பில் வெறும் சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தே பலரின் இதயத்தில் சிம்மாசனம் போட்டவர் ரஜினிகாந்த். ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்றுக்கொண்ட கேரக்டர்கள் எல்லாவற்றுக்கும் தன் தனித்த நடிப்பால் அப்ளாஸை வாங்கிக்கொடுத்தார். தயாரிப்பாளர்களின் சிரமத்தை போக்க ஒரே வருடத்தில் மட்டும் தொடர்ந்து 24 படங்களை நடித்தவர். இப்படி கஷ்டப்பட்டவர் ரஜினிகாந்த், அவருக்கு எப்படி சூப்பர்ஸ்டார் பட்டம் கிடைத்தது தெரியுமா?
மூன்று வருடங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகே தாணு தயாரிப்பில் பைரவி படத்தில் நடிக்க தொடங்கினார். அப்போது ரஜினியின் நடிப்பை பார்த்த தாணு, ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை ரஜினிக்கு கொடுத்து படத்தை விளம்பரம் செய்ய முடிவு செய்தார். இதை தெரிந்த ரஜினிகாந்த் பதறி போய் தாணுவிடம் போய் வேண்டாம் என கெஞ்சி இருக்கிறார். ஆனால் தாணு பிடிவாதமாக “மெகா சூப்பர் ஸ்டார் என்று போட்டுவிடவா” என்று கேட்க, இதற்கு அதுவே பரவாயில்லையே என்ற மோடுக்கு சென்ற ரஜினிகாந்த். சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஓகே சொல்லி இருக்கிறார். மறுநாள் ஒரு நாளிதழில் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு பைரவி பட விளம்பரம் வெளியானது. இருந்தும், அப்பட்டத்திற்கான தகுதியை தனக்குள் வளர்த்து கொண்டவர். பல வருடம் கழிந்தும் இன்றும் இளம் நடிகர்களுடன் கடும் போட்டி போட்டு நடித்து வருகிறார். இதை அவரின் சமீபத்திய படமான காலா வரை உறுதி செய்து இருக்கிறார்.
அடுத்த சூப்பர்ஸ்டார் அஜித் தான் என்றும், விஜய் தான் என்றும் அவர் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பே ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். அப்போது பேசிய அவர், சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ஒரு போஸ்ட் மாஸ்டர் இடம் போல் தான். இன்று நான் உள்ளேன், நாளை வேறு ஒருவர் வருவார்கள். இது எனக்கு மட்டும் சொந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்.
